“தென்னிந்தியாவின் முதல் பெண்களுக்கான கல்லூரி”- சாராள் டக்கர் கனவு

            நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது சாரா டக்கர் பள்ளி மற்றும் சாரா டக்கர் கல்லூரி. பெண்களுக்கான இந்தப் பள்ளியும், கல்லூரியும் பல தலைமுறைகளை தாண்டி மகளிருக்கு கல்வி சேவையை வழங்கி வருகிறது. நெல்லை மட்டுமல்லாமல் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள பல லட்சம் பெண்கள், கல்வியறிவு பெறுவதற்கு காரணமாக இருந்த இந்த சாராள் டக்கர் கல்வி நிறுவனம் பற்றி அறிந்து கொள்வோம்…

நெல்லையின் அடையாளம் சாராள் டக்கர்!
           நெல்லை தூத்துக்குடி பக்கம் யாராவது வந்தீர்கள் என்றால், அங்கிருக்கும் மூன்று தலைமுறை பெண்களிடம் பேசி பாருங்கள். பத்துக்கு எட்டு பேர், நான் எஸ்டிசி-யில் (STC) படித்தேன் என்று சொல்வார்கள். கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் படித்த பள்ளி, கல்லூரி தான் இந்த எஸ்டிசி. அதாவது சாரா டக்கர் கல்லூரி. சாராள் டக்கர் என்ற பெயரை கேட்டதுமே உங்களுக்கு புரிந்திருக்கும். யாரோ ஆங்கில நாட்டு பெண்மணியான சாராள் டக்கர், திருநெல்வேலிக்கு வந்து ஒரு பள்ளிக்கூடத்தை தொடங்கி, பெண் பிள்ளைகளை படிக்க வைத்திருக்கிறார் என்று தான் பலரும் நினைத்திருப்பீர்கள். ஆனால் உண்மை அதுவல்ல. உண்மையை படித்து அறிவோம்.

ஜான் டக்கர் – சாராள் டக்கர்!
         அது 18-ம் நூற்றாண்டு. ஆங்கிலேயர்களிடம் இருந்து நாம் சுதந்திரம் வாங்கவில்லை. அந்தக் காலக்கட்டத்தில், பிரிட்டன் பெண்மணியான சாராள் டக்கர் என்பவரின் அண்ணன் ஜான் டக்கர், திருநெல்வேலியில் மருத்துவப் பணியை செய்து வருகிறார். அந்த சமயத்தில், ஜான் டக்கர் திருநெல்வேலியில் தான் சந்திக்கின்ற சில சுவாரஸ்யமான சம்பவங்களை பற்றி பிரிட்டனில் இருக்கும் தனது தங்கை சாராள் டக்கருக்கு கடிதமாக எழுதுவார். ஏனென்றால், அந்தப் பெண் சாராள் டக்கர் ஒரு மாற்றுத்திறனாளி. 2 கால்களும் இல்லாத பெண். வீட்டுக்குள்ளேயே தான் இருப்பார். அதனால் அவருக்கு பொழுது போக வேண்டும் என்பதற்காகவும், இந்தியா என்ற ஒரு நாட்டை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தனது தங்கைக்கு கடிதம் எழுதுகிறார்.

நெல்லையின் விதியை மாற்றிய கடிதம்..!
            ஒருநாள் அப்படி ஒரு கடிதத்தை ஜான் எழுதினார். அந்தக் கடிதத்தில், “சாராள்.., இன்னைக்கு பாளையங்கோட்டையில் ஒரு தெரு வழியாக குதிரையில் போய் கொண்டிருந்தேன். தண்ணி தாகமா இருந்ததால், அங்கே இருக்கும் ஒரு வீட்டு கதவை தட்டினேன். ஒரு இளம்பெண் மெதுவா கதவை திறந்தாள். அவளிடம் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டதும், டப்புனு கதவை மூடிட்டு உள்ளே ஓடி போய்விட்டாள். இதை பற்றி விசாரித்த போது, அந்நிய ஆண்களிடம் எங்கள் பெண்கள் பேசவே மாட்டார்கள் என ஊர்க்காரர்கள் சொன்னார்கள். இந்த உலகம் எவ்வளவு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த பெண்கள் இவ்வளவு பயந்தாங்கொள்ளிகளாக இருக்கிறார்களே.. இதை பார்த்தால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது” என்று அந்தக் கடிதத்தில் ஜான் எழுதி இருந்தார்.

உருவாக்கிய சாராள் டக்கர் பள்ளி – கல்லூரி!
          இதை படித்த சாராள் டக்கருக்கு ரொம்ப வேதனை ஆயிடுச்சு. என்னடா இது. நம்மளே கால் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி. நாமளே இவ்வளவு படிச்சிருக்கோம். சிந்தனையாளராக இருக்கிறோம். ஆனால், இந்தப் பெண்கள் எந்த படிப்பறிவும் இல்லாமல், இவ்வளவு பயந்தாகொள்ளியாக இருக்கிறார்களே என்று வருந்திய சாராள் டக்கர், உடனே தன்னிடமிருந்த 20 பவுன் நகையை ஜான் டக்கருக்கு அனுப்பி வைத்து, அண்ணா, எனக்காக தயவுசெய்து பாளையங்கோட்டையில் உள்ள பெண்களுக்காக ஒரு பள்ளியையும், கல்லூரியையும் தொடங்குமாறு சொல்கிறார். தங்கையின் பேச்சை தட்டாத ஜான் டக்கரும், சாராள் டக்கர் பெயரிலேயே பள்ளியையும், கல்லூரியையும் தொடங்குகிறார். 13 வருடங்கள் எப்படி எப்படியோ பணத்தை திரட்டி நடத்தி விட்டார்கள். ஆனால், அதற்கு பிறகு அவர்களால் அதை நடத்த முடியவில்லை. ஸ்கூலையும், காலேஜையும் இழுத்து மூடிவிட்டார்கள்.

துடித்துப் போன சாராள் டக்கர்!
          இதை சாராள் டக்கரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. எங்கேயோ இங்கிலாந்தில் லண்டனில் பிறந்து வளர்ந்த ஒருத்தி, இந்தியா எந்த திசையில் இருக்கிறது என்பது கூட தெரியாத ஒருத்தி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை என்ற வார்த்தையை உச்சரிக்கக் கூட தெரியாத ஒரு பெண், இங்குள்ள பெண்களை நம்மால் இன்னும் படிக்க வைக்க முடியலையே என்ற வருத்தத்திலேயே மனம் நொந்து படுத்த படுக்கையாகி விடுகிறாள். கடைசியில் மரணப் படுக்கையில் அவள் இருக்கிறாள். அப்பொழது அவரது தோழிகள் கேட்கின்றனர், “ஏன் சாராள்.. உனக்கு என்ன அப்படியொரு கவலை.. ஏன் இப்படி ஒவ்வொரு நாளும் நலிந்து கொண்டே போகிறாய் என்று கேட்கிறார்கள். சாராள் அழுதுகொண்டே சொல்கிறாள், “நான் இதுவரை எனக்காக பெரிதாக எதையும் ஆசைப்பட்டதில்லை. லட்சியமும் எனக்கு இல்லை. பிறக்கும் போதே மாற்றுத்திறனாளியாக பிறந்தவள் நான். ஆனால் எங்கேயோ திருநெல்வேலியில் பாளையங்கோட்டையில் இருக்கும் பெண்கள் வாழ்க்கையும் என்னை போல ஆகிவிடக்கூடாது என்றுதானே அவர்களுக்காக பள்ளி, கல்லூரியை கட்டினேன். ஆனால் என் கனவுக்கோட்டை உடைந்து நொறுங்கிவிட்டது. இனி அந்த பெண்களை யார் படிக்க வைக்கப் போகிறார்கள்.. இனி நான் வாழ்ந்து பிரயோஜனமே இல்லை என்று கூறிக் கொண்டே சாராள் இறந்து விடுகிறாள்.

அதிர்வை ஏற்படுத்திய சாராளின் மரணம்!
            சாராளின் இந்த மரணத்தை அருகில் இருந்து பார்த்த அவரது தோழிகளான சோஃபியா, மரியா, ஜோன்வா ஆகியோரால் அவரது இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்படியாவது சாராளின் ஆசையை நிறைவேற்றிவிட வேண்டும் என்று எண்ணிய அவர்கள், லண்டனில் இரவு பகலாக சுற்றி பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு கடினப்பட்டு 811 பவுன் தங்கத்தை சேர்த்து சாராளின் அண்ணன் ஜான் டக்கருக்கு அனுப்பி வைக்கிறார்கள். எங்கள் தோழி சாராள் டக்கரின் ஒரே ஆசை நிராசையாக மாறிவிடக் கூடாது. மீண்டும் சாராள் டக்கர் பள்ளியையும், கல்லூரியையும் ஆரம்பியுங்கள். அங்கிருக்கும் ஏழை பெண்களை படிக்க வையுங்கள் என்கிறார்கள். இன்றைக்கு வரைக்கும் மூன்று தலைமுறை பெண்களுக்கு, கிட்டத்தட்ட 20 லட்சத்துக்கும் மேலான பெண்களுக்கு கல்வி செல்வத்தை கொடுத்திருக்கிறது சாராள் டக்கர் பள்ளியும், சாராள் டக்கர் கல்லூரியும்.

நிஜமான தேவதை!
            ஆனால், சாராள் டக்கர் ஒரு முறை கூட இந்தியாவுக்கு வந்ததே இல்லை. திருநெல்வேலியை அவள் பார்த்ததே இல்லை. பாளையங்கோட்டை எப்படி இருக்கும் என்று கூட அவளுக்கு தெரியாது. இந்திய பெண்கள் எப்படி இருப்பார்கள் என்பதும் தெரியாது. அவள் நினைத்திருந்தால், தனது அண்ணன் எழுதிய கடிதத்தை படித்து சிரித்துவிட்டு கடந்திருக்க முடியும். ஆனால் ஏதோ ஒரு தேசத்தில் பிறந்து வளர்ந்த பெண்கள், கல்வியறிவு இல்லாமல் இருக்கிறார்களே.. அவர்ளின் வாழ்க்கையை எப்படியாவது முன்னேற்றிவிட வேண்டும் என்று கனவு கண்டாளே தூர தேசத்துக்கு சாராள் டக்கர். அவள் தான் நிஜமான ஏஞ்சல்.


Discover more from Nanbaninfo

Subscribe to get the latest posts to your email.

0 0 votes
Article Rating

Leave a Reply

0 Comments
Inline Feedbacks
View all comments
Back To Top
0
Would love your thoughts, please comment.x
()
x

Discover more from Nanbaninfo

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nanbaninfo

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading