கொல கொலயா முந்திரிக்கா…

கொல கொலயா முந்திரிக்கா…
நரிய‌ நரிய சுத்தி வா…

இப்படி ஒரு வட்டத்த சுத்தி ஓடிட்டு இருந்த பயலுகதான், இன்னைக்கு கனவை தேடி ஆளுக்கு ஒரு பக்கமாக ஓடிட்டு‌ இருக்காங்க… இவங்க சிறுசா இருந்தப்ப அடிச்ச கூத்துக்கு அளவே இல்லைங்க…

பாகம் – 3

நாங்க திண்ணைய பிடிச்சு நடந்தப்போ இவனுங்க எங்களைய பிடிச்சு நடந்தானுங்க… இப்படிலாம் எங்கள கலாச்ச சீனியர்லாம் உயர்நிலை பள்ளிக்கு போக…
“நம்ம காலம் டா கபிலா இறங்கி அடினு” தொடக்கப்பள்ளில கால் பதிச்சு ஓட ஆரம்பித்த காலம் அது. I spy விளையாட்ட இன்னும் ஐஸ் பாய்னு சொல்ர அளவுக்கு தாங்க நாங்க!!! 15 பேர் சாபூத்திரி போட்டு ஆட ஆரம்பிச்ச அவுட் ஆகுறவன் சிக்குனான். ஒருத்தன் கப் ஐஸ் அடிச்சாலும் மறுபடியும் முதல்ல இருந்து வரனும். ஒருத்தன தேட விட்டுட்டு வீட்டுக்கு போய் சாப்பிட்டுலாம் வருவானுங்க… மரத்து மேல, சந்து பொந்து, மொட்டைமாடி, புதரு, இடிந்த வீடுனு ஒளியாத இடம் இல்லை… “பாம்பின் கால் பாம்பறியும்” ன்ற மாறி கண்டுபிடிக்கரவனும் லேசு பட்டவனா இருக்க மாட்டான், ஒருத்தனயே குறிவச்சு பழிவாங்குறதும் நடக்கும்… எல்லாமே மகிழ்ச்சி தாங்க அப்போ… லீவு நாட்களிலும் விளையாட்டுதா பள்ளி லயும் விளையாட்டு தா… புத்தகத்த வச்சே பல புதுப்புது விளையாட்ட உருவாக்கி போர் அடிக்கர பாடத்தையும் ஆர்வமாக்கிக்குவோம் நாங்களே!!! ராஜா ராணி விளையாட்டுல ஆரம்பிச்சு துப்பாக்கி விளையாட்டு, புக் கிரிக்கெட்னு எக்கச்சக்கம்… அடடா எப்படிலாம் இருந்தோம்னு இருக்குல அடுத்த எபிசோட்ல வேர்ல்டு பேமஸ் கேம் பத்தி சொல்ல போறேன் ரெடி ஆகிக்கோங்க…!

வார்த்தை ஜாலம் : AK


Discover more from Nanbaninfo

Subscribe to get the latest posts to your email.

Nanban
0 0 votes
Article Rating

Leave a Reply

0 Comments
Inline Feedbacks
View all comments
Back To Top
0
Would love your thoughts, please comment.x
()
x

Discover more from Nanbaninfo

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nanbaninfo

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading