நாலு மணி ஆனா போதும் எப்படா
பெல்லடிக்கும் எப்படா பையை தூக்கிட்டு ஓடலாம் என்று ரெடியா உக்காந்து இருப்போம் இதெல்லாம் எதுக்குனு நினைக்கிறீங்க வீட்டுக்கு வந்து படிக்கிறதுக்கா? அதான் இல்ல எல்லா கடையிலும் உடைத்து போட்ட சோடா மூடிய எடுக்க… என்னடா சோடா மூடின்னு சொல்றானேனு பாக்குறீங்களா…! போன எபிசோட்ல உங்களுக்கெல்லாம் வேர்ல்ட் ஃபேமஸ் கேம் பத்தி சொல்றேன்னு சொல்லி இருப்பேன் அதை தான் இப்ப நம்ம பாக்க போறோம்; அது என்னன்னா “செல்லாக்கு” செல்லாக்குன்னு ஒரு கேம் இருக்கு!!! இது விளையாடுறதுக்கு ஒரு நாலு அஞ்சு பேர் இருந்தாலே போதும் ஒரு வட்டத்தை போட்டு அதுக்குள்ள சோடா முடிய கொட்டி கொஞ்ச தூரத்தில் இருந்து ஒரு கோட்ட போட்டு அங்க இருந்து கல்ல தூக்கி வட்டத்த நோக்கி எரிஞ்சா அதுல எவன் கண்ணு வட்டத்துக்கு பக்கத்துல இருக்கோ அவன் தாங்க அந்த கல்லால சோடா மூடிய முதல்ல அடிக்கணும் வட்டத்துக்குள்ள இருக்க சோடா முடி வட்டத்திற்கு வெளியில போச்சுன்னா அந்த சோடா மூடி அவனுக்குங்க இப்படி அந்த காலத்திலேயே நாங்க சூதாட்டம் ஆடி இருக்கோங்க… நாங்க இப்படி ஒரு பக்கம் சோடா மூடி செல்லாக்குன்னு சுத்த எங்க சீனியர்ஸ் அதாங்க ரியல் நண்பன் நற்பணி மன்றம் அவங்க கேணி வாய்க்கால் ன்னு நீச்சல் அடிச்சு சுத்திட்டு திரிஞ்சாங்க… அப்போ திடீர்னு ஒரு ஞானோதயம் தோன்றி ஆளாளுக்கு இருவது ரூபா சந்தா மாறி கட்டி ஒரு சேவிங்ஸ் ரெடி பண்ணினாங்க அந்த ஷேவிங்சும் எதுக்கு என்று பார்த்தா அது ஒரு முக்கியமான விஷயத்துக்காக ரெடி பண்ணினாங்க அந்த மிக முக்கியமான விஷயத்தை நான் இப்போ சொல்ல மாட்டேன் அத நீங்க பின்வரும் போது தெரிஞ்சுக்கங்க!!! இதுக்காக அவங்க பிசினஸ் எல்லாம் பண்ணி இருக்காங்ன்னா கூட பாத்துக்கோங்க😅 தர்பூசணி பழ தோட்டத்துக்கே போய் கம்மி விலைக்கு தர்பூசணி வாங்கி அத ரெண்டு மடங்கு லாபத்துக்கு எல்லாம் சேல் பண்ணி இருக்காங்க… என்னடா நம்ம பசங்களுக்கே என்ன புத்தி வந்திருச்சா எல்லாம் பிசினஸ் மேக்னெட் ஆகிடுவாங்களா அப்படி நீங்க எல்லாம் யோசிக்கலாம் ஆனா அது தான் கிடையாது அந்த வித்த தர்பூசணியில வந்த காச வச்சு நாங்க என்ன பண்ணனும்னா அதை எப்படி சொல்றதுன்னு நான் யோசிச்சிட்டு இருக்கேங்க அடுத்த எபிசோட் ல பாப்போம் …
வார்த்தை ஜாலம் : Ak
![](https://i0.wp.com/nanbaninfo.in/wp-content/uploads/2024/06/10000741034594639261263796014.jpg?resize=347%2C145&ssl=1)
![](https://i0.wp.com/nanbaninfo.in/wp-content/uploads/2024/06/10000741062574464886935453175.jpg?resize=272%2C186&ssl=1)
![](https://i0.wp.com/nanbaninfo.in/wp-content/uploads/2024/06/1000074101957342666243309573.jpg?resize=271%2C185&ssl=1)
![](https://i0.wp.com/nanbaninfo.in/wp-content/uploads/2024/06/100007409750627570134729742.jpg?resize=300%2C223&ssl=1)
Discover more from Nanbaninfo
Subscribe to get the latest posts to your email.