அத்துணை கவலைகளையும் மறக்க ஒரே மருந்து…
நீங்க நினைக்கிற மாதிரி வேற கசாயம் இல்லை! ஓயாம வருசம் முழுதும் கூட விளையாடுர கிரிக்கெட்… சொல்லும் போதே சிலிர்க்குது!! அது என்ன விளையாட்டு தானனு நீங்க சொல்றது கேக்குது, ஆனால் எங்களோட உணர்வுலயும் நினைவுலயும் கிரிக்கெட் நிறைந்து இருக்குங்க ❤️ தென்னை மட்டை 5ரூ பெப்சி பந்துல இருந்து ஆரம்பிக்குது கிரிக்கெட்க்கும்🏏 எங்களுக்குமான உறவு. விவரம் தெரிஞ்சு நாங்க அதிகமா விளையாடிய விளையாட்டு கிரிக்கெட் தா… லீவு விட்டா போதும் எங்களுக்கு பொழுது விடியரதே மைதானமாகதா இருக்கும்.
![](https://i0.wp.com/nanbaninfo.in/wp-content/uploads/2024/06/1000076482837376303144919537.jpg?resize=640%2C360&ssl=1)
பெரிய பசங்க கூட விளையாடும் போதெல்லாம் பீல்டிங் நிக்க மட்டும்தா வாய்ப்பு கிடைக்கும்… முதல் ஓவர்ல இறங்கி கடைசி வர ஆடுர பேட்ஸ்மேன் உம் இருக்காங்க சும்மா சுத்துற சுத்துல உஷா பேன் தோத்துறும் அப்படியான பேட்ஸ்மேனும் உண்டு…! போன அத்தியாயத்தில பண்ண அந்த பிசினஸ் கூட கிரிக்கெட் பேட் வாங்க தாங்க…!! கிரிக்கெட் ஆடுரதோட மட்டும் நிறுத்த மாட்டோம். இந்தியா அணி எங்க என்ன கிரிக்கெட் ஆடினாலும் பொதிகைல இருந்து இப்போ ஜியோ சினிமா வர எதையும் மிஸ் பண்ண மாட்டோம்…
![](https://i0.wp.com/nanbaninfo.in/wp-content/uploads/2024/06/10000766536420336443992819355.jpg?resize=640%2C295&ssl=1)
கிரிக்கெட் பாக்க ஆண்டனா கம்பிய சரி பண்ணதுல இருந்து இப்போ addon போட்ர அளவுக்கு கிரிக்கெட் எங்களோட ஒன்றி இருக்குங்க… கிரிக்கெட்னா மைதானத்துலதா ஆடனுன்ற காலம் போய் எந்த சின்ன இடம்கிடச்சாலும் அங்க எங்களுக்கான மைதானத்த உருவாக்கி மகிழ்ச்சி அடைஞ்சுக்குவோம்… இன்னும் எங்க எங்கெல்லாம் விளையாடினோம் எவ்வளவு திட்டுகள், எவ்வளவு ஓட்டங்கள் நிறைந்தது எங்க கிரிக்கெட்னு அடுத்த அத்தியாயத்தில் பாப்போம் மக்களே…
![](https://i0.wp.com/nanbaninfo.in/wp-content/uploads/2024/06/image_editor_output_image-1606610825-17182876872138125493876818365491.jpg?resize=640%2C481&ssl=1)
வார்த்தை ஜாலம்…AK
Discover more from Nanbaninfo
Subscribe to get the latest posts to your email.