ஒரு அம்மாவின் ஆனந்தம் ❤️

என் மகள் ❤️

வயது 32 ஆகிறது. 21 வயதில் Food Process Engineering இல் B.Tech முடித்து, படித்ததற்கு சம்பந்தமேயில்லாமல் Wild Life Sciences படிக்க வேண்டும், அதுவும் ஆஸ்திரேலியா போய் படிக்க வேண்டும் என்ற கனவுடன் தான் கோயம்புத்தூரிலிருந்து வீடு வந்தாள்.

நான் அன்று இருந்த பண நெருக்கடியில் “என்னால் உனக்கு உதவ முடியாது ஆரண்யா, இரண்டு வருடம் வேலைக்குச் சென்று, பணம் சேர்த்து வைத்துக்கொண்டு பிறகு யோசி” என்று சொல்லிவிட்டேன். படித்த படிப்புக்கு கிடைத்த வேலையை ஏற்காமல் முதலைப்பண்ணையில் வாலன்டியராக ஒரு மாதம் போனாள். பிறகு அங்கேயே வேலையிலும் சேர்ந்தாள். அன்றிலிருந்து இன்றுவரை there is no looking back.

அவளுக்கு பிடித்த வேலையில் பங்ளூரு, ஸ்ரீலங்கா என்று சுற்றி வந்தாள். பிறகு MSc Wildlife Sciences படிக்க ஆசைப்பட, Wildlife Institute of India, Dehradun இல் 4 வருட அனுபவத்துடன் சேர்ந்தாள்.

அந்தத் துறை பற்றி எதுவுமே எனக்குத் தெரியாதலால் எல்லாமே அவள் ஆராய்ந்து, விசாரித்து, அவளே எடுத்துக்கொள்ளும் முடிவுகள் தான்.

2012 இல் ஏற்பட்ட ஆஸ்திரேலிய படிப்பு கனவு 2022 இல் சாத்தியமானது. Sydney இல் PhD படிப்பதற்கான முழு உதவித்தொகையுடன் கூடிய சந்தர்ப்பம் அமைந்து அங்கே பயணமானாள். இப்பொழுது இரண்டாம் வருடத்தில் இருக்கிறாள். தனியாக காடு மலை என்று four wheeler driving செய்து, பாலைவனத்தில் பல மாதங்கள் தங்கி ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறாள்.

இதை ஏன் இப்பொழுது எழுதுகிறேன்? அவள் வயதில் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு, உருப்படாத கணவனுடன் இருந்து கொண்டு, அடுத்த வேளை உணவுக்கு போராடிக்கொண்டு, வாழ்வே ஒரு நிர்பந்தத்தின் பேரில் ஓட்டிக்கொண்டிருந்தேன்.

இன்று அதே வயதில் என் மகள் 40 மாணவர்கள் கலந்துகொண்ட ஒரு போஸ்டர் போட்டியில் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவளின் பெயரும் போஸ்டரும் அந்தக் கல்லூரியின் Honour Board இல் வைக்கப்படப்போகிறது என்ற செய்தி கிடைத்ததில் இருந்து அவள் அம்மாவாக நான் மிகவும் பெருமை கொள்கிறேன்.

இது வரை பலரால் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறேன்….அவளுக்கு ஏன் திருமணம் செய்யவில்லையென! இதுவரை செய்யாததும், இனி செய்வதும் செய்யாததும், அப்படி செய்தால் யாரை செய்வது என எல்லா முடிவும் அவளுடையாதக மட்டுமே இருக்கும் என்று நான் கூறும்போது நீயெல்லாம் ஒரு அம்மாவா என்ற கேள்விகளும் வந்திருக்கின்றன.

நம் பிள்ளைகள் நமக்கு நேர்ந்துவிடப்பட்டவர்கள் அல்ல. நாம் தேர்ந்தெடுத்த ஒரு பொறுப்பு மட்டுமே. அவர்கள் வாழ நாம் ஒரு கருவியாக மட்டுமே இருத்தல் மட்டுமே சரி. ஊருக்காக உலகத்துக்காக அந்த நாலு பேருக்காக, அவர்கள் கனவை தொலைக்க வைத்து, அவர்கள் வாழ்வை வாழ இயலாமல் செய்வது தான் பெற்றோர்கள் செய்யும் கொடுமை. உயிர் கொலையை விட மோசமான கொலை நம் விருப்பத்திற்கு அவர்களை பலிகடா ஆக்குவது.

நான் தலைநிமிர்த்தி சொல்லிக் கொள்கிறேன்…..அவள் திருமணம் புரிந்து ஒரு பிள்ளையுடன் இன்று நின்றிருந்தால் கூட எனக்கதில் பெருமை ஒன்றுமில்லை. Run of the mill போல அவள் வாழவில்லை என்பதில் நான் பெருமை கொள்கிறேன். அவள் பாதையில் நான் குறுக்கிடாமல் இருந்ததற்கு நான் பெருமை கொள்கிறேன்.

ஒவ்வொருவரும் தனிமனிதரே. அவரவர் வாழ்வை வாழப்பிறந்த ஜீவன்களே! இங்கு யாருக்கும், அது பெற்றோராகவே இருந்தாலும் மற்றவர் வாழ்வில், முடிவில் தலையிட அதிகாரம் கிடையாது. இதை உணர்ந்து வாழ்ந்தால் போதும்!

Source: முகநூல் பதிவு✨


Discover more from Nanbaninfo

Subscribe to get the latest posts to your email.

0 0 votes
Article Rating

Leave a Reply

0 Comments
Inline Feedbacks
View all comments
Back To Top
0
Would love your thoughts, please comment.x
()
x

Discover more from Nanbaninfo

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nanbaninfo

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading