நீச்சலும்-ரெட்டவாய்க்காலும்…!

“பிரியாணி தான் வேணும்னு அடம்பிடிக்காம
ஐஸ் பிரியாணினாலும் ஆசையா சாப்பிடனும்…‌!”

– இதுல இருந்து சொல்ல வரது என்னன்னா இருக்கரத வச்சு வாழ பழகிக்கோங்க!!! சும்மா ஒரு தத்துவத்தோட ஆரம்பிப்போம்னு…

          எங்களுக்கு கிரிக்கெட் எவ்வளவு முக்கியம்னு போன அத்தியாயத்தில தெரிஞ்சுருப்பிங்க… நாங்க கிரிக்கெட் பாக்க இன்னும் பல புதுப்புது யுக்திகள கையாண்டு இருக்கோம் ! 2011-வேர்ல்டு கப் யாராலும் மறக்க முடியாத ஒன்று. வேர்ல்ட்கப் ஃபைனல் எங்க ஊரு நடுவுல ரவி பெரிப்பா வாடகைக்கு உற்றுந்த மெக்கானிக் கடையில Tv செட்பன்னி ஒரு கூட்டத்தையே கூட்டி வச்சுருந்தோம். ஒவ்வொரு பத்துக்கும் நாங்க பண்ண அலப்பறதா அங்க ஹைலைட்…✨ சச்சின் அவுட் ஆனதும் டிவி ஆப் பண்ணிட்டு போற காலமெல்லாம் அப்ப முடிஞ்சு இருந்தது ஏன்னா நின்னு முடிச்சு கொடுக்க தலைவன் தோனி இருந்தான்… சச்சின்!!! சச்சின்!!! அப்படின்னு கத்திக்கிட்டு இருந்த காலம் தோனி..! தோனி..!! அப்படின்னு கத்துற காலம் ஆயிடுச்சு.

நாங்க அவர் மேல வச்சிருந்த நம்பிக்கை கொஞ்சம் கூட வீணாகவே இல்லை…நினைச்சபடி கடைசி வரை நின்னு சிக்ஸ் அடிச்சு மேட்ச் வின் பண்ணி கொடுத்தார்… 2007-வேர்ல்ட் கப் வாங்குனப்பவே தோனி மேல மரியாதை வர ஆரம்பித்து விட்டது.ஆனால், இந்த 2011- வேர்ல்ட் கப் அவர ‘தல‘ அப்படின்னு கூப்பிடுற அளவுக்கு எங்களோட கேப்டன் ஆக்கிடுச்சு… 2011 வேர்ல்ட் கப் ஜெயிச்சப்போ நாங்க பண்ண அலப்பறை இருக்கே !!! ஒரு மினி ஆட்டோ எடுத்துக்கிட்டு வண்டி நிறைய பசங்கள அள்ளி போட்டுக்கிட்டு கையில இருந்த பேட் ஸ்டிக் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு இந்தியா ஜெய்ச்சத பயங்கரமா செலிப்ரேட் பண்ணோ…. “பனமரத்துல வவ்வாலா இந்தியா கிட்ட சவாலா…” அப்படின்னு நிறைய கத்திக்கிட்டு… அதை இப்ப நினைச்சாலும் சிலிர்த்து போகுது ! அதுக்கப்புறம் இந்தியா வேர்ல்டு கப்பும் ஜெயிக்கல நாங்க செலிப்ரேட் பண்ணவும் இல்ல இன்னமும் நம்பிக்கையோடு வெயிட் பண்றோம் 2024 வேர்ல்ட் கப் லோடிங்…

2011-World Cup

              தோனி ரிட்டயர்டு ஆகுற காலமும் வந்தது சரி அப்போவாவது கிரிக்கெட் பார்க்கிறது நிப்பாட்டிட்டீங்களா அப்படின்னு கேட்டா… அதான் இல்ல. அப்போதான் இந்தியன் கிரிக்கெட் காப்பாத்த கிங் கோஹ்லி பேட்டிங்ல பட்டைய கிளப்பிட்டு இருந்தாரு அவர் ஒரு பக்கம்னா ! ஹிட்மேன் ரோஹித் ஒரு பக்கம்..!!
என்னதான் பேட்ஸ்மேன் காக மேட்ச் பார்த்தாலும் இப்போ பும்ரா அவரோட பவுலிங் பாக்குறதுக்காகவே மேட்ச் பார்க்க வேண்டியதா இருக்கு. வேர்ல்ட் கிரிக்கெட்-ல எல்லா பேட்ஸ்மேனுக்கும் பெரிய அச்சுறுத்தலா இருக்கிறது நம்ம பும்ரா தான்… அதனால கடைசியா நடந்த 50 ஓவர் வேர்ல்ட் கப் பாக்குறதுக்கு இன்னும் ஒரு படி முன்னேறி #ப்ரொஜெக்டர் எல்லாம் செட் பண்ணி ஃபைனல்ஸ் போட்டு பார்த்தா டீம் இந்தியா எங்களை அப்செட் பண்ணிட்டாங்க. டிராவிஸ் ஹெட் மொத்த இந்தியாவோட கனவையும் சிதைச்சு பாட் கம்மின்ஸ்  சொன்ன மாதிரி இந்தியாவையே அமைதியாக்கிட்டான் படு பாவி…😶 இனி கிரிக்கெட் பாக்க கூடாதுன்னு அப்போ முடிவு எடுத்து. அதுக்கப்புறம் ஒரு மாசம் கழிச்சு வந்த ஐபிஎல் தான் பார்த்தோம்…😅

மகாதானபுரம்-ரெட்டவாய்க்கால்

           இதெல்லாம் போகட்டும் நீங்க எங்க தாண்டா போய் அந்த நீச்சல் கத்துக்கிட்டீங்க அப்படின்னு நீங்க கேட்கிறது எனக்கு புரியுது.. எங்களுக்கு நீச்சல் கத்துக்கறதுக்கு பெரிய நீச்சல் குளம் எல்லாம் இல்லைங்க… தண்ணி எங்க கிடக்குதோ அங்க. கேணி; வாய்க்கால்; ஆறு-ன்னு எல்லா பக்கமும் போய் நீச்சல் கத்துக்கிட்டோம்…! எங்களோட முக்கியமான குளிக்கிற இடம்னா அது மகாதானபுரம்-ரெட்டவாய்க்கால் தான்…!! எங்க சீனியர்ஸ் எல்லாரும் கம்ப்யூட்டர் கிளாஸ் போறதா சொல்லிட்டு வாய்க்காலில் குளிச்சிட்டு புரோட்டாவும், காப்பியும் குடிச்சிட்டு வருவாங்க அதுதான் எங்களுடைய இன்ஸ்பிரேஷன்😅 இப்போ நாங்க வாய்க்காலில் குளிச்சிட்டு தாபாவில் சாப்பிட்டு வந்துட்டு இருக்கோம் இத நீங்க எங்களோட வளர்ச்சியா கூட பார்க்கலாம்…😂 வாய்க்காலில் குளிக்கறதுனா 5,10 நிமிஷம் இல்ல ரெண்டுல இருந்து மூணு மணி நேரம் எருமை மாடு கனக்கா தண்ணிக்குள்ளேயே கிடப்போம்… வாய்க்காலிலேயே தொட்டு புடிச்சு விளையாடுவோம்; கும்ஸ் அப்படின்னு ஒரு வாய்க்கால் இருக்கு அங்க போனா ஆலமர விழுதை புடிச்சு விளையாடுறது; இந்த கரைக்கும் அந்த கரைக்கும் போறதுனு பொழுது போறதே தெரியாது…! இன்னும் நல்லா மழை பெஞ்சா போதும் எங்க ஊரு கேணி எல்லாம் நிரம்பி வழியும் அப்படி கேணில தண்ணி வந்துட்டா உடனே நம்ம பாய்சும் போய் குதிச்சு விளையாடுவாங்க…!!

Nanban gang

என்ன ஒரு நல்ல விஷயம்னா நாங்க எல்லாரும் நீச்சல் அடிக்க கத்துக்கிட்டோம்… அதுக்கு முக்கிய காரணம் எங்க Nanban gang ஓட கடைக்குட்டி. இப்படியே நாங்க ஊர் சுத்துறதும் கிரிக்கெட் ஆடுறதும் வாய்க்காலுக்கு போறது மாவே எங்களோட ஸ்கூல் வாழ்க்கை முடியுற தருணத்திற்கு வந்திருச்சு… இப்போ எல்லாரும் கல்லூரிக்கு போக வேண்டிய கட்டாயம் அதாவது சொந்த மண்ணை விட்டு வெளியூர்ல போய் படிக்கணும்… அதுவும் அவன் எடுத்த மதிப்பெண்ணுக்கு ஏத்த மாதிரி ஒவ்வொரு ஊர்ல வேற வேற காலேஜ்ல ஆளுக்கு ஒரு கோர்ஸ் படிச்சோம்… எங்களோட கல்லூரி நாட்கள் இல்லனா ரொம்ப அழகானதாக இருந்தாலும், எங்களோட ஊர்ல இருக்க முடியாது கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது… ரெண்டு நாள் மூணு நாள் சேர்ந்த மாதிரி லீவ் விட்டா போதும் உடனே பொட்டி படுக்கையை கட்டிட்டு கிளம்பி வந்துடுவோம் சொந்த மண்ணை மிதிக்கிறது ஒரு சுகம் அது வெளியூர்ல போய் கஷ்டப்படுற எங்களை மாதிரி இளைஞர்களுக்கு தான் தெரியும்… சரி இந்த லீவுல எல்லாம் ஊருக்கு வந்து என்ன பண்ணுவீங்க…மன்றம்னு சொல்றீங்க அப்படி என்ன நல்ல பணி செஞ்சிருக்கீங்க அப்படின்னு நீங்க யோசிக்கலாம்!!! நாங்க அதையும் பண்ணி இருக்கோம் திருவிழா பண்டிகையின் வரும்போது, எங்களால முடிஞ்ச தண்ணீர் பந்தல்; வண்டி வேஷம் இந்த மாதிரி சின்னதா ஏதோ ஒன்றை அரேஞ்ச் பண்ணி எங்களுக்கான சந்தோஷத்தை நாங்களே உருவாக்கிக் கொள்வோம்…

எங்களுடைய மிகப்பெரிய சந்தோஷம்னா அது என்னுடைய பொங்கல் விழா தான்… பொங்கல் விழாவை பற்றியும் அது மிகப் பெரிய திருவிழாவா மாறி நிக்கிறதையும் அடுத்த அத்தியாயத்தில் பேசுவோம்…
நன்றி

வார்த்தை ஜாலம்…AK


Discover more from Nanbaninfo

Subscribe to get the latest posts to your email.

Nanban
0 0 votes
Article Rating

Leave a Reply

0 Comments
Inline Feedbacks
View all comments
Back To Top
0
Would love your thoughts, please comment.x
()
x

Discover more from Nanbaninfo

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nanbaninfo

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading