சொர்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா?!
தமிழ் நாட்டின் வளமிக்க கரூர் மாவட்டத்தின் பழைய ஜெயம்கொண்டம், ஒரு அழகிய சிற்றூர். எங்கள் தாய் மண்ணான அதில் விதையாக நடப்பட்டு இன்று நாங்கள் பலரும் கொழுந்து விட்டு வளர்ந்துளோம்.
இன்று பல்வேறு நகரங்களில் வேலை நிமித்தமாக வாழ்ந்து வந்தாலும் எங்கள் ஊரின் மீதும் மண்ணின் மீதும் காதல் கொண்ட மண்ணின் மைந்தர்கள் ஆரம்பித்ததே இந்த நண்பன் இன்போ (nanbaninfo.in) வலைத்தளம்.
இந்த தளம் உங்களுக்கான சிறந்த ஒரு நண்பனாக இருக்கும். இணைய உலகமான இக்காலத்தில் விஷயங்களை தெரிந்து கொள்வது என்பது அத்தியாவசியமானது.
எங்ககளின் வலைத்தளத்தில் உங்களுக்கு பிடித்த, நீங்கள் படிக்க விரும்பும் பல விஷயங்களையும் படித்து மகிழலாம் உங்கள் உறவுகள் மற்றும் நட்புகளுடன் பகிரலாம்.
இந்த தளத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தில் குறிப்பிடத்தக்க பங்கு எங்கள் ஊரான பழைய ஜெயம்கொண்டத்தின் வளர்ச்சிக்கும் அங்கு வாழும் மக்களின் நல்வாழ்விற்காக பயன்படுத்தப்படும்.
அறிவின் சிறப்பு என்பது கற்பதில் தான் இருக்கிறது. எங்களின் வலைத்தளம் உங்களின் அறிவை பெருக்கி கொள்ள உதவும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
நமது தெய்வபுலவர் திருவள்ளுவர் குறளில் சொன்னது போல
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு. (396)
விளக்கம்:
மணலைத் தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க கல்வி அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.
வாருங்கள் நண்பர்களே கற்போம்! அறிவை பெருக்குவோம்! நண்பன் இன்போ உங்களை அன்புடன் வரவேற்கிறது
4 thoughts on “About us”
Comments are closed.