
நேற்று ஒரு இஸ்லாமிய திருமண விருந்தில் பார்த்தேன்.
Senior citizens மட்டும் என்று
ஒரு வரிசை தனியாக இருந்தது.
அங்கேயே ஒரு நபர் நின்று கொண்டு, வயதானவர்களை மட்டும் அந்த வரிசையில் அனுமதித்து கொண்டிருந்தார்.
விளக்கம் கேட்டதற்கு, முதியவர்கள் சுகர், மூட்டு வலி போன்றவற்றால் அதிக நேரம் நின்று பந்தியில் இடம் பிடிப்பது சிரமம். Buffetலும் நின்று கொண்டே சாப்பிடுவது சிரமமாக இருக்கும். Buffet அருகே அமர்ந்து சாப்பிட டேபிள், சேர் போட்டிருந்தாலும், ஒவ்வொரு முறையும் எழுந்து சென்று வரிசையில் நின்று உணவு வாங்குவது சிரமம்.
அது போக இவர்கள் சற்று மெதுவாக சாப்பிடுவார்கள்.
மற்றவர்கள் பந்தியில் வேகமாக சாப்பிட்டு விட்டு இலையை மூடும் போது, இவர்களும் அவர்களோடு சங்கடத்துடன் சரியாக உணவருந்தாமல் இலையை மூட வேண்டி வரும்.
இவைகளை தவிர்க்கவே,
அவர்களுக்கு தனி வரிசை என்றார்.
இந்த சிந்தனையை உயிர் தந்தவருக்கு பாராட்டுக்கள்…
நல்ல முயற்சி.திருமணங்களில்
எல்லோரும் கடைபிடிக்கலாம்✨
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.