நலம் நலமறிய ஆவல்.. இக்கடிதத்தை நவீன யுகத்தின் காதல் கடிதமகவே கருதி எழுதுகிறேன். நான் உன்னை சந்தித்து சில மாதங்கள் ஆகிவிட்டன, ஆனால் நான் உன்னுடன் உறவாடிய பொழுதுகள் இன்னும் என் மனதில் உலாவிக்கொண்டிருக்கிறது. நீ யார்? நீ எப்படி என் மனதிற்குள் நுழைந்திட்டாய் என்ற கேள்வி எழுவதுண்டு, அப்போது எல்லாம் நம் பாலியப்பருவ நிகழ்வுகள் ஒரு மின்னலை போல சற்று என்று என் கண்முன் தோன்றுவதுண்டு. நீ ஒன்றும் எனக்கு புது முகம் அல்லவே, சிறுவயதில் நான் உன்னுடன் விளையாடிய தருணங்கள் நிறைய உண்டு. இந்த தருணங்கள் எல்லாம் கடந்து தான் பல வருடங்களுக்குப் பின்பு நாம் இப்போது சந்தித்தோம். உன்னை பார்த்த தருணத்திலேயே எனக்கு உன்னை ரொம்ப பிடித்துவிட்டது என்றே கூறலாம். அதன் பிறகு எல்லாம் என்ன? நாம் இருவரும் நிறைய பேசினோம், அடிக்கடி சிறு ஊடல்கள் வேறு அப்படியே நாட்கள் மிகவும் அழகாக நகர்ந்தது. இந்த நாட்களில் என்னை அறியாமலேயே நான் உன்னை விரும்பத் தொடங்கிவிட்டேன். என்னுடைய விருப்பத்தை பலமுறை வெவ்வேறு தருணங்களில் உன்னிடம் சொல்லாமல் சொல்லவும் செய்திருக்கிறேன். இதன் பின்பு எல்லாம் என் கனவுகளில் மட்டுமின்றி என் நினைவுகளிலும் நீ ஒருவன் மட்டுமே. ஒரு கட்டத்திற்கு பிறகு எனக்கு புரியத்தொடங்கியது நீ இன்றி என் வாழ்வு இல்லை என்றும், உன்னிடத்தில் தோன்றிய இந்த அன்பு வேறு யாரிடத்தில் தோன்றாது என்றும். நீயே உன் காதலை என்னிடம் பரிமாறிக்கொள்வாய் என நான் காத்திருந்த நாட்கள் அவை. அப்பொழுது தான் எனக்கு ஒரு உண்மை கொஞ்ச கொஞ்சமாக புரியத்தொடங்கியது, என்னவென்றால் என் மீது உனக்கு இருப்பது அன்பு மட்டுமே காதல் இல்லை என்று. இந்த உண்மை தெரிந்த அன்றே என் மனம் கண்ணாடியைப் போல் நொறுங்கிவிட்டது. காதலை வெறும் சினிமாக்களில் மட்டும் பார்த்து ரசித்த எனக்கு அந்த அனுபவங்களைப் கொடுத்தது நீ ஒருவன் மட்டுமே. ஏனென்றால் நான் உன் அழகை ரசித்து உன்னை காதலிக்கவில்லை, நான் நேசித்தது உன் ஈடுஇணை இல்லாத உன் உள்ளதை என்று. இனி நீ வேறு ஒருவளுக்கு சொந்தமானவன் என்பதை என்னால் இன்று கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உன் நினைவுகள் என் மனதை விட்டு நீங்குமா என்று விடைதெரியாமல் தவிக்கின்றேன். உன்னை மறக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு அதில் வெற்றிக்கொள்வேன் என்று நான் சொன்னால் அது என்னை நானே ஏமாற்றுவது போன்றே ஆகும். என் நிஜத்தில் என்னை நீ பிரிந்தாலும், என் கனவுகளில் "என் மூன்று காலமும் நீ ஒருவன் மட்டுமே" ஆவாய்.
இப்படிக்கு
உன்னை நேசித்தவள்.
மீண்டும் வேறு ஒரு கதைத்தளத்துடன் சந்திப்போம்.
என்றும் அன்புடன்
செல்வ மீனா. ரா
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.