கரூர்காரங்க யாரா இருந்தாலும் உங்க ஊரு ஸ்பெஷல் என்னன்னு கேட்டா சொல்ற முதல் விஷயம் என்னன்னா “கரம்” மட்டும் தாங்க… என்னடா கரமா அது எப்படி இருக்கும்னு தான நீங்க கேட்கும் கேள்வி😅 கரம் னா நல்லதா ஒரு வட்டாவுல (பாத்திரம்) இரண்டு டம்ளர் பொரிய போட்டு கூட கொஞ்சம் வெங்காயம் பீட்ரூட் மிக்ஸ் சேத்து இரண்டு மூன்று வகையான சட்னிய போட்டு ஒரு முறுக்கு ஒரு எல்லடை ஒரு அப்பளத்த நொறுக்கி விட்டு கரண்டிய விட்டு ரெண்டு கிட்டு கிண்டி ஒரு தட்டுல வச்சு மேல லட் ஆ வெங்காயத்தை தூவி கொடுத்தா அப்புடி இருக்கும் 💯… சொல்லும் போதே எச்சி ஊறுதுல 😅 இப்போ கரத்திலேயே கொஞ்சம் அப்கிரேட் ஆயிட்டாங்க நிறைய வெரைட்டிஸ் ஆப் கரம் கிடைக்குது!!! ஒவ்வொரு கடைக்காரர்களும் தன்னுடைய வியாபாரத்தை அதிகரிக்கும் அப்படிங்கிறதுக்காக விதவிதமான சட்னிகளை புதிய வகை கரங்களையும் அறிமுகப்படுத்துறாங்க…

லிஸ்ட் of கரம்:-
- சாதா கரம்
- அப்பளகரம்
- எல்லடகரம்
- போண்டாகரம்
- சம்சாகரம்
- முட்ட கரம்
- எல்லட செட்டு
- அப்பள செட்டு
- முட்டை செட்டு
- சம்சா செட்டு
- பார்பிக்யூ கரம்
- மயோனைஸ் கரம்
- etc..
கலக்கல்னு இப்போ லிஸ்ட் நீண்டுடே போகுது..
சட்னில வெரைட்டிஸ்னு பாத்தா தேங்காய் சட்னி கார சட்னி கடலை சட்னி மல்லி சட்னி மிளகா சட்னினு எவ்வளவு… என்னதான் கரம் சாப்டாலும் கடைசியா ஒரு செட்டு சாப்டாதா ஃபினிசிங்கா இருக்கும் 💯 அதோட இல்லாம தேன் மிட்டாய் தேங்காய் பர்பி கடலை உருண்டைனு டெசெர்ட் கூடாதா முடிப்போம்…இப்போ நிறைய கடைகள் வந்துருச்சு நம் மக்களுமே புதிய உணவுகளுக்கு மாறிட்டு வராங்க… ஆயிரம்தா இருந்தாலும் கரம் மாறி வருமா…
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.