வணக்கம் மக்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்கன்னு நம்புறேன்… எப்போதும் போல தத்துவத்தோடையே போவோம்;
“கண நேரமோ; கால் மணி நேரமோ அனைத்தும் உனக்கானது உபயோகி..!!! அனாவசியப்படுத்தி விடாதே…!! பிற்காலத்தில் அவமானப்படுத்தப்படுவாய்…!”
“காலமும், கடலையும் எவருக்கும் காத்திரா !புரிஞ்சுக்கோங்க !! பொழச்சிக்கோங்க !!! பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்…!
ஒரு வழியா எங்கள பத்தி ஓரளவுக்கு சொல்லி முடிச்சிட்டேன்னு நினைக்கிறேன் இந்த அத்தியாயத்தில நாங்க செஞ்ச சின்ன சின்ன சேட்டைகளையும், குறும்புகளையும் பத்தி பாப்போம்…
சேட்டை நம்பர் 1:
எல்லாரும் ஆறு ஆறாவது, ஏழாவது முடிச்சு டீன் ஏஜ் குள்ள கால் வைத்திருந்தோம் அப்போதான் அதிகமா ஊர் சுத்த ஆரம்பிச்சோம் எங்களோட மிகப் பெரிய பொழுது போக்கா இருந்தது வேட்டைக்கு போறது தான்… ! எங்க ஊரை சுத்தி நிறைய காடு இருக்கும் காடுனா நீங்க நினைக்கிற மாதிரி அமேசான் காடு எல்லாம் இல்லை சும்மா வானம் பார்த்த பூமி தான் அங்கங்க கருவேல மரம் முளைச்சு காடு மாதிரி இருக்கும் நாங்க ஒரு அஞ்சு, ஆறு பேர் சேர்ந்து கிட்டு என்ன பண்ணுவோம்னா… ஓணான் வேட்டைக்கு போவோம் ஓணான கல் எடுத்து அடிச்சு அவன வேட்டையாடுவதுல எங்களுக்கு ஒரு சந்தோசம் இது எல்லாத்துக்கும் எங்க தலைவன் தான் எங்களோட முன்னோடி…!

சேட்டை நம்பர் 2:
இந்த கொரோனோ எல்லாம் வர்றதுக்கு முன்னாடியே நாங்க குரூப்பா சேர்ந்து சல்லடை சிக்கன் செஞ்சிருக்கோம் ஸ்கூல் காம்பவுண்டுக்குள்ள அடுப்பை மூட்டி துவர சலிக்கிற சல்லடைய வச்சு… சிக்கன மசாலாவுல ஊற வைத்து அதை எடுத்து சல்லடை மேல வச்சு சுட்டு சாப்பிட்டு இருக்கோம்; இந்த தந்தூரி சிக்கன் எல்லாம் வர்றதுக்கு முன்னாடியே நாங்க கறியை சுட்டு சாப்பிட்டோம்…!!
சேட்டை நம்பர் 3:
அப்படித்தான் ஒரு நாள் கிரிக்கெட் விளையாடிட்டு இருக்கப்ப பந்த தூக்கி ஒரு வீட்டுக்குள்ள அடிக்க அந்த வீட்டு கிழவன் பந்த தர முடியாதுன்னு சண்டை போட… பொறுத்தது போதும் பொங்கி எழுனு எங்க பசங்க துணிஞ்சு அந்த வீட்டுக்குள்ள போக திடுதிப்புன்னு அந்த பெரிசு நாய அவுத்து விட பதரி போய் அங்கே வீட்டயே இரண்டு ரவுண்டு அடிச்சு இந்த பக்கம் முள்வேலிய வேற தாண்ட முடியாம கடைசியா பய புள்ளங்க மரத்துல ஏறிட்டாங்க…!! கத்துன கத்து கொஞ்சம் நஞ்சம் கிடையாது அன்னைக்கு ஒரு பிரளயமே வெடிச்சிருச்சு…!!! அதை இப்ப நினைச்சாலும் வயிறு வலிக்க சிரிக்க தோணுது…!
சேட்டை நம்பர் 4:
இந்த டீன் ஏஜ் வந்ததுக்கு அப்புறம் எங்களோட பர்த்டே செலிப்ரேஷனும் கொஞ்சம் மாறிடுச்சு பர்த்டே பம்ஸ் பிறந்தநாள் பையனை போட்டு அடிக்கிறது மட்டும் இல்லை ஏதாவது ஒரு விசேஷம் வரும்போது அந்த மாசத்துல யாருக்கெல்லாம் பர்த்டே வருகிறதோ அவங்கள எல்லாம் வர வச்சு ஒரு அரை கிலோ கேக்க வாங்கி வெட்டி; அங்க மீந்து போன சாம்பார் சட்னி எல்லாத்தையும் அவங்க மேல கொட்டி; மஞ்சள் பொடி கலர் பொடினு கரச்சு ஊத்தி; உங்களை பெத்தவங்களே என் பிள்ளை இல்லைனு சொல்ற அளவுக்கு மாற்றி விட்ருவோம்😂 பர்த்டே செலிப்ரேஷன் காக ஊர் விட்டு ஊரு வந்த கதைலாம் இங்க இருக்கு…!

சேட்டை நம்பர் 5:
நாங்க விளையாடின வேர்ல்ட் ஃபேமஸ் கேம் பத்தி எல்லாம் பார்த்திருப்பீங்க அது கூட சேர்த்து புதுசா நாங்க விளையாண்ட “ஒம்போ சம்போ” இந்த விளையாட தேவையான பொருட்கள் ஒரு வாட்டர் கேன் ஒரு குச்சி அவ்வளவுதான் அந்த வாட்டர் கேன் குச்சியால தட்டி ஒன்பதுபோது வரைக்கும் அடிச்சு கடைசியா 10 நடிக்கும்போது சம்போனு சொல்லி கீழ அடிக்கணும் இது தான் கேம். இந்த பத்து வரைக்கும் அடிச்சவங்க எல்லாம் யார் அடிக்கலையோ அவன ஓட விட்டு,வாட்டர் கேன் வட்டத்துக்குள்ள போடவைக்கனும்…! கடைசியா அடிக்காம இருக்கவன் நெலமதான் ரொம்ப பாவம்…
சேட்டை நம்பர் 6:
நாங்க வேட்டைக்கு போறதா சொன்னத கேள்விப்பட்டு இருப்பீங்க அந்த வேட்டைல தேன் வேட்டையும் உண்டு எங்க ஊர்ல அங்கங்க சின்ன சின்னதா தேன் கூடு கட்டி இருக்கும் அப்படி இருந்துச்சுன்னா அதை நோட்டம் விட்டு வீக்கெண்டுல பாய்ஸ் ஓட கிளம்பிடுவோம் நாங்க ப்ரொபஷனல் எல்லாம் கிடையாது நெருப்பு வைத்து எடுக்கர அளவுக்கு, எந்த மரத்துல இருக்கோ அந்த கிளையோடு ஒடித்து விட்ருவோம் தேனி கொத்தா வரும்போது அங்க இருந்து ஓடி…!!! கொஞ்சம் அடங்குனதுக்கு அப்புறம் அந்த அந்த தேன் ராடை எடுத்து எல்லோரும் ஷேர் பண்ணிப்போங்க…! இதுல தேனீ கொட்டாத ஆளே கிடையாது…😅🙈 என்னடா இன்னும் எவ்ளோ டா சொல்லிட்டே இருக்க போற அப்படின்னு நீங்க கேட்கிறது எனக்கு புரியுது இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் தான், நம்மளுடைய சின்ன வயசு ஞாபகங்களை கண்ணு முன்னாடி கொண்டு வந்து அந்த காலத்துல நம்மளும் அப்படி இருந்தோமே அப்படிங்கிற ஒரு ஃபீல் கொண்டு வரும்💯.

நாங்க இதெல்லாம் பண்ணினோம் அப்படின்னு சொல்றதுக்காக மட்டும் இதெல்லாம் சொல்லல உங்களுக்கும் நடந்து இருக்கும்; நீங்க இத படிக்கும் போது நாம எப்படி இருந்தோம் அப்படிங்கறது நீங்களும் பீல் பண்ணி உங்க கண்ணு முன்னாடி ரியலைஸ் பண்ணி இருப்பீங்கன்னு நம்புறேன்….!!! நீங்க நினைக்கலாம் ஏன் இதெல்லாம் தனித்தனியா எபிசோடை கூட போட்டு இருக்கலானு இதுதான் பழசங்கொடத்து பசங்க அப்படிங்கற தொடர்கதையோட கடைசி அத்தியாயம்…! பழசங்கொடத்து பசங்க அப்படிங்கிற இந்த தொடர்கதையில நம்முடைய சின்ன வயசு ஞாபகங்களை நினைவுபடுத்தும் விதமா மலரும் நினைவுகளான நாம ஓடி ஆடடி விளையாடிய “தொட்டு புடிச்சு”, “ஐஸ் பாய்” இன்னும் பல விளையாட்டுக்களையும், நாம ஏன் கிரிக்கெட்டை இவ்வளவு கொண்டாடுறோம் கிரிக்கெட்டுக்கும் நமக்குமான தொடர்பு என்ன? ஏன் மத்த விளையாட்டுகளை விட கிரிக்கெட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் ? கிரிக்கெட் நமக்கு என்ன செஞ்சது? கிரிக்கெட்டுக்காக நாம என்னலாம் செஞ்சோம் ? அப்படிங்கறத பத்தி எல்லாம் நிறைய சொல்லி இருக்கேன்… அதுபோக எங்க ஊர் திருவிழாக்களையும் அதனுடன் சிறப்புகளையும் எடுத்து சொல்ற விதமா எங்க ஊரு திருவிழா அப்படி தனியாக ஒரு அத்தியாயமும் அமைச்சு இந்த தொடர்கதை ரொம்ப போர் அடிக்காம ஓரளவுக்கு என் அறிவு எட்டியது போல் கொண்டு போய் இருக்கேன்…!
நாம தினம் தினம் நிறைய விஷயங்களை படிக்கிறோம் அதுல ஒரு சில விஷயங்களை மட்டும் தான் நம்மளால ரியாக்ட் பண்ண முடியும். அந்த மாதிரி படிச்சு பீல் பண்ற விதமா என்னுடைய ஒவ்வொரு அத்தியாயங்களும் அமைச்சருக்கும் நான் நம்புறேன். இப்ப நாங்க எல்லாரும் எங்களோட ஸ்கூல், காலேஜ் படிப்பு முடிச்சு அடுத்த கட்ட நகர்வை நோக்கி போய்கிட்டு இருக்கோம் இனி எங்க வாழ்க்கையில் நடக்க இருக்க முக்கியமான நிகழ்வுகளை எல்லாம் வேறு ஏதேனும் தலைப்புகளின் கீழ் கண்டிப்பாக உங்களுக்கு பதிவிடுகிறேன். அடுத்த மாசத்திலேயே மிகப்பெரிய ஈவண்ட் ஒன்னு காத்துகிட்டு இருக்கு. அதற்காக தான் நானும் எங்களோட பாய்ஸ்ம் காத்துனு இருக்கோம்…!! அப்படி என்னடா பெரிய விஷயம்னு என்ன நீங்க யோசிக்கலாம் அதுக்கு நீங்க ஒரு மாசம் காத்துகிட்டு இருக்கணும் கூடிய விரைவில் வேறு ஏதும் தலைப்புகளுடன் வேறு சில நல்ல கதைகளோட உங்களை சந்திக்கிறேன்.
நன்றி…
இங்ஙனம்: AK
எங்கள் தனித்துவமான வாட்ஸ்அப் சேனலில் இணைந்து எங்களுடன் தொடர்பில் இருங்கள். புதிய செய்திகளும் சிறப்பு சலுகைகளும் உங்களுக்காக காத்திருக்கின்றன. எங்கள் வளரும் சமூகத்தின் ஒரு பகுதியாக இப்பொழுதே சேருங்கள்!

https://whatsapp.com/channel/0029Vab3zjcGufInexCDBx2O
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.