நாம் அனைவரும் ஒரு நாளில் அதிகமாக செலவிடும் நேரத்தில் அதிகபட்சமான நேரத்தை நம்முடைய கைப்பேசிக்குத் தான் கொடுக்கிறோம். அதில் முக்கியப்பங்கு வகிப்பது இன்ஸ்டாகிராமில் வரும் ரீல்ஸ் மட்டுமே. அதில் ஒரு ஆணின் அதிகப்பட்ச ஆசையாக எப்படிபட்ட பெண் துணையாக வேண்டும் என்பதற்கு இன்ஸ்டாகிராம் வடிவமைப்பது எல்லாம் சூரரை போற்று ” பொம்மி” , குட் நைட் “அனு” இல்லையேல் மயக்கம் என்ன “யாமினி”. இவர்களில் யாரேனும் ஒருவரை போன்ற துணை அமைந்தால் அந்த ஆணின் வாழ்க்கை சொர்க்கம் என்று சொல்ல வருகிறது. ஆனால் அப்படிப்பட்ட பெண் கிடைத்தப்பின் அவர்களை சரியாக நேசிக்க தெரியவில்லையா இல்லை அவர்களை மிகவும் அசட்டையாக கையாள்கிறோமா??
நான் பார்த்து வியந்த ஒரு நிஜ வாழ்க்கை “யாமினி” ஒருத்தங்க இருக்காங்க. அவங்க பிறந்த வீட்ல உடன் பிறந்தவங்களுக்காக வாழ்ந்தாங்க, இப்போவும் ஓடிக்கிட்டே தான் இருக்காங்க அவங்க புகுந்த வீடுக்காக. பெண்ணிற்கு வேலைக்கு சென்று குடும்பத்தை பார்த்துக்கொள்வது வரமா இல்லை சாபமா என்பது விடையற்ற பட்டிமன்றமே. பெண் என்பவள் யாமினியாக இருப்பதில் தவறு ஒன்றுமில்லை எனினும் எல்லோருக்கும் அன்பைக் கொடுத்து ரிசிவிங் சைடில் வைத்து அன்பு செய்யும் இவளுக்கும் நீங்கள் பெற்றுக்கொள்ளும் அன்பில் வெறும் ஒரு பங்கினை திருப்பிக் கொடுப்பதில் ஒன்றும் தவறு இல்லையே. எப்போது ஒரு பெண் ஒரு ஆணுக்காக இரக்கப்பட ஆரம்பிக்கிறாளோ அப்பொழுது அவள் எல்லாவற்றையும் இழக்கிறாள். அந்த எல்லாவற்றில் என்பதில் அவளுடைய எல்லாமும் அடங்கும். இது போன்ற உங்களுடைய வாழ்க்கை துணையாக வரவேண்டும் என்று இன்ஸ்டாகிராமில் லைக் போடுவதோடு மட்டும் நிறுத்திவிடாதீர்கள். உங்களுடைய நெடுந்தூர காதல் பயணம் ரம்மியமாக அமைய நீங்களும் கொஞ்ச அன்பை பரஸ்பரம் செய்துகொள்ளலாமே..!!
மீண்டும் வேறு ஒரு கதைத்தளத்துடன் சந்திப்போம்.
என்றும் அன்புடன்
செல்வ மீனா. ரா
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.