நெட் சென்டர்கள் (Net Center) – இன்றைய 2K கிட்சுக்கு அப்டினா என்னனு கூட தெரியாம இருக்கலாம். ஆனா ஒரு காலத்துல, 1990 களின் பிற்பகுதியிலிருந்து 2010 வரை, கொடி கட்டி பறந்தன நெட் சென்டர்கள். அன்றைய இளவட்டங்களோட புகலிடமா நெட் சென்டர்கள் இருந்துச்சு. நெட் சென்டர் போறது அப்போல்லாம் எவ்ளோ கெத்தான விஷயம் தெரியுமா?
பல பேர் பொழுதை போக்க சாட் (Chat) பண்ணாங்க சில பேர் சீரியசா சாட் பண்ணி லவ் கூட பண்ணாங்க அப்புறம் கல்யாணம் கூட பண்ணாங்க. நெட் சென்டர்ல பாக்க கூடாத படத்த பாத்து மாட்டி அசடு வழிஞ்சவங்க கதைலாம் நினைச்சா இப்போ கூட சிரிப்பு வரும்!.
சண்டே ஆனா முன்னாடியே போய் ரிசர்வ் பண்ணிட்டு நாலு மணி நேரம் அஞ்சு மணி நேரம் லாம் பிரௌசிங் பண்ணவங்களாம் இருக்காங்க. வீக்கெண்ட் நெட் சென்டர்ல பிரௌசிங் பண்ண இடம் கிடைச்சா அவன் அன்னைக்கு நரி முகத்துல முழிச்சான்னு வச்சிக்கலாம்!.

டென்த், டுவெல்த் எக்ஸாம் ரிசல்ட் வரப்போ நெட் சென்டர்ல அவளோ கூட்டம் இருக்கும். ஒவ்வொருத்தரும் தங்களோட மார்க்க தெரிஞ்சிக்க முட்டி மோதுவாங்க. ஒருத்தருக்கு மார்க் எவ்ளோன்னு சொல்ல பாத்து ரூபா கேட்டு செமையா கல்லா கட்டுவாங்க நெட் சென்டர் ஓனருங்க!.
அப்போலாம் வேலைக்கு அப்ளை பண்ணனும்னா நெட் சென்டர் போகணும், ரெஸ்யும் (Resume) பிரிண்ட் எடுக்கணும்னா நெட் சென்டர் போகணும், இன்டெர்வியூ வர சொல்லியிருக்காங்களானு பாக்க நெட் சென்டர் போகணும் செலக்ட் ஆகியாச்சான்னு பாக்க நெட் சென்டர் போகணும் ஆக வேல சம்பந்தப்பட்ட எல்லா விஷயத்துக்கும் நெட் சென்டர் போகணும்.
பாரின்ல இருக்க பையன் இல்ல பொண்ணோட விடியோல பேச பெரியவங்க நெட் சென்டர்ல போய்தான் பேசியாகணும். ஆன்லைன்ல எந்த வேல நடக்கணும்னாலும் நெட் சென்டருக்கு தான் போயாகணும் வேற வழியே கிடையாது. இந்த நெட் சென்டர் ஓனருங்க போடற சீன் இருக்கே யப்பா. ஊரு சேர்மன் கூட அவ்ளோ சீன் போடா மாட்டார்.
இப்படி ஏகபோகமா எகத்தாளத்தோட போய்க்கிட்டிருந்த நெட் சென்டர் மற்றும் அதோட ஓனர்களின் விதியை ஸ்மார்ட் போன் மாத்திச்சு. எல்லாத்துக்கும் நெட் சென்டர நம்புன காலம் போய் சகலத்தையும் பண்ணக்கூடியதா ஸ்மார்ட் போன் மாறிச்சி. கொஞ்சம் கொஞ்சமா நெட் சென்டர்களோட மவுசு கொறஞ்சு கழுதை தேஞ்சி கட்டெறும்பு ஆனா கதையா கடைசில இப்போ எங்கயோ அங்க ஒன்னு இங்க ஒண்ணுனு ஆகி போச்சு. அதுவும் ஸ்மார்ட் போன் இல்லாத சில பேர் இருக்க வரை தான். அப்புறம் இருக்கற மிச்சமும் காணாம போயிடும்.
காலம் என்ன மாயமெலாம் செய்யுது. புதுசா வரது பழசா போகுது பழசா போனது காணாமலே போகுது! எதுவுவே இங்க நிரந்தரமில்லை மாற்றம் தான் மாறாதது!
அடுத்த வாரம் சந்திக்கலாம். நன்றி மதன்!
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.