போராட்டம் என்பது உரிமைக்குரல். உங்களுக்கு தேவையான ஒன்று கிடைக்காமல் போனால், அதை அடைவதற்காக நீங்கள் எழுந்து குரல் கொடுக்கிறீர்கள். இதுதான் போராட்டம். இது காலங்காலமாக மாறாமல் தொடர்ந்து வருகிறது. இது நல்லதுதான். ஆனால் எல்லா நல்ல விஷயங்களை போல போராட்டத்திற்கும் நல்ல, கெட்ட, தீய பக்கங்கள் உண்டு, அவற்றை பற்றி பார்ப்போம்.
ஏன் போராட வேண்டும்
போராட்டம் என்பது மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு ஆற்றல்மிக்க கருவி. காந்தி போன்ற முன்னோடிகள் இதற்கான முக்கியத்துவத்தை உணர்த்தியவர்கள். காந்தியை பின்பற்றி உலகம் முழுவதும் அறப்போராட்டங்களை பலர் முன்னெடுத்து வெற்றி பெற்றனர்.
இது போன்ற முன்னோடிகளால்தான் நமக்கு போராட்டத்தின் அருமை தெரிகிறது. உலகம் முழுவதும் நடந்த போராட்டங்கள் மக்களின் உரிமைகளை நிலைநாட்ட உதவின.
தமிழ்நாட்டில் முக்கியமான போராட்டங்கள்
போராட்டங்களுக்கு தமிழ் நாடும் விதிவிலக்கல்ல. தமிழ் நாட்டின் முக்கியமான போராட்டங்கள் மற்றும் அவற்றின் தாக்கங்கள் பற்றி பார்ப்போம்.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள்
முதல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் (1937-1938): மெட்ராஸ் பிரெசிடென்சியின் முதலமைச்சராக இருந்த ராஜாஜி, பள்ளிகளில் ஹிந்தியை கட்டாய பாடமாக்கினார். இதற்கு எதிராக பெரியார், அண்ணாதுரை போன்ற திராவிட இயக்கத் தலைவர்கள் போராடினர். இதனால், 1940-ஆம் ஆண்டில் ஹிந்தி கட்டாயம் நீக்கப்பட்டது.
இரண்டாவது ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் (1965): இந்திய அரசு ஹிந்தியை இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக்க முயற்சியைக் கண்டித்து, தமிழ்நாட்டில் வலுவான எதிர்ப்பு கிளம்பியது. இந்த போராட்டம் தமிழ்நாட்டில் மாணவர்களையும், அரசியல் தலைவர்களையும் போராட்டத்திற்கு இட்டுச் சென்றது. பல இடங்களில் வன்முறை நிகழ்ந்தது, இதனால், மத்திய அரசு தன முடிவை கைவிட்டது.
ஜல்லிக்கட்டு போராட்டம் (2017)
தமிழ்நாட்டில் நடந்த மிகப் பெரிய போராட்டங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு போராட்டம், மக்களின் ஒருமித்த குரலின் சின்னமாக இருந்தது. ஜல்லிக்கட்டு என்ற பாரம்பரிய விளையாட்டை தடை செய்யப்பட்டதற்கு எதிராக மக்கள் கூடி போராடினர். இப்போராட்டம் தமிழர் அடையாளத்திற்காக நடந்தது. இதுவே அரசாங்கத்தையும், நீதித்துறையையும் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யது, மாற்றியமைக்க வைத்தது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் (2018)
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் மாசு மற்றும் மக்கள் ஆரோக்கியத்திற்கு அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக மக்கள் போராட்டத்தில் இறங்கினர். 2018ஆம் ஆண்டு மே 22 அன்று, போலீஸார் போராட்டக்காரர்களுக்கு எதிராக துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த போராட்டம் எதிர்மறையான முடிவுகள் கொண்டிருந்தாலும், மக்களின் துணிவு மற்றும் உறுதியை வெளிப்படுத்தியது.
ஈழத் தமிழர் ஆதரவு போராட்டங்கள்
தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டும் போராட்டங்களில் ஈழத் தமிழர் ஆதரவு போராட்டங்கள் முக்கியமானவை. இவை 1980 காலத்தில் அதிகள் நடைபெற்றன பின்னர் 2009-10 காலத்தில் அதிகம் நடைபெற்றது.
தமிழர்களின் உரிமைகள் மற்றும் அடையாளங்களை பாதுகாக்கும் இப்போராட்டங்கள், அவ்வப்போது தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
போராட்டத்தின் நல்லது, கெட்டது, தீயது
போராட்டங்களுக்கு நல்ல, கெட்ட, தீய பக்கங்கள் உண்டு அவற்றை தெரிந்து கொள்வது நமக்கு போராட்டங்களை புரிந்து கொள்ள பேருதவிபுரியும்.
நல்லது
தமிழ்நாட்டில், மக்கள் தங்களுடைய உரிமையைப் புரிந்து கொண்டு போராடுகிறார்கள். இது அவர்களின் உரிமைகளை நிலைநாட்ட உதவுகிறது. போராட்டங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு சக்தியாக இருக்கின்றன.
கெட்டது
போராட்டங்கள் சில நேரங்களில் வன்முறையாக மாறுகின்றன. இது பொதுமக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்தியாவில் நடக்கும் போராட்டங்கள் மாநில அளவிலேயே அதிகமாக கவனிக்கப்படுகின்றன, இதனால் தேசிய அளவில் அவற்றின் முக்கியத்துவம் குறைகிறது. தொடர்ச்சியான போராட்டங்கள் மாநில வளர்ச்சியை பாதிக்க கூடும் மற்றும் அமைதியை குலைக்கக்கூடும்
தீயது
தவறான காரணங்களுக்காக போராட்டங்களை ஆதரிக்கக் கூடாது. பணம் கொடுக்கக் கூடாது. உண்மையான காரணங்களுக்காக போராட வேண்டும். தவறான போராட்டங்கள் சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும், மாநில வளர்ச்சியை பின்னுக்கு தள்ளி விடும்.
முடிவு
போராட்டங்கள் நம்மை வளர்ச்சியடையச் செய்ய வேண்டும். அதனை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பது நமது எதிர்கால சமூகத்திற்கு சொல்ல வேண்டிய பாடம். ஜல்லிக்கட்டு மற்றும் ஸ்டெர்லைட் போன்ற போராட்டங்கள் நமக்கு உந்துசக்தியாகவும் பாடமாகவும் இருக்க வேண்டும்.
போராட்டங்களின் நோக்கம் நேர்மையுடனும் மக்கள் நலத்தை நோக்கமாகவும் கொண்டிருக்க வேண்டும் அப்போது தான் போராட்டங்கள் மீது மக்களுக்கு மதிப்பு கூடும் அவர்களின் ஆதரவும் கிடைக்கும்.
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.