ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்
மக்கள் மருந்தகம் (ஜன் ஒளஷதி) (Jan Aushadhi) திட்டம், இந்திய அரசின் ஒருபாராட்டத்தக்க திட்டம் ஆகும். இது மத்திய பா.ஜ.க ஆட்சியில் 2015-ஆம் ஆண்டு பிரதமர்நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. அன்றைய உரம் மற்றும் மருத்துத்துறை அமைச்சர், மறைந்த திரு. அனந்த குமார் அவர்கள் எடுத்த பெருமுயற்சிகளால் இந்ததிட்டம் நடைமுறைக்கு வந்தது.
இந்த திட்டத்தின் மூலம், தரமான ஜெனரிக் மருந்துகளை மலிவான விலையில் மக்கள்பெற முடிகிறது. இது குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு மிக பெரிய வரப்பிரசாதமாக உள்ளது.
மக்கள் மருந்தகங்கள்:
மக்கள் மருந்தகங்கள் என்ற பெயரில், இந்த மருந்துகள் தமிழ் நாட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு கிடைக்கும் மருந்துகள், பிரபலமான பிராண்டு மருந்துகளுக்குசமமான தரத்திலும், செயல்திறனிலும் இருக்கும். ஆனால், விலை மிகவும் குறைவாக இருக்கும்.
பிரபலமான மருந்துகள்:

▪ பாராசிடமால் (Paracetamol)
▪ அமோக்ஸிசிலின் (Amoxicillin)
▪ அசிடோபிலின் (Acebrophylline)
▪ அசிக்லோஃபெனாக் (Aceclofenac)
▪ அபிராடெரோன் (Abiraterone)
▪ மெட்ஃபார்மின் (Metformin)
▪ அடோர்வாஸ்டாடின் (Atorvastatin)
▪ இன்சுலின் (Insulin)
▪ கால்சியம், வைட்டமின் D3 (Calcium, Vitamin D3)
▪ மல்டிவிடமின் (Multivitamin) மற்றும்
▪ கண் நோய்கள், ஏன் புற்று நோய் மருந்துகள் கூட மிகவும் மலிவானவிலையில் கிடைக்கின்றன.
முக்கிய அம்சங்கள்:
1. மலிவான விலை: பிரபலமான பிராண்டு மருந்துகளின் விலையை விட 20% முதல்80% வரை குறைவான விலையில் கிடைக்கின்றன.
2. தரமான மருந்துகள்: அனைத்து மருந்துகளும் தரமானவை மற்றும் பாதுகாப்பானவை.
3. அனைத்து வகை மருந்துகளும்: பொதுவான நோய்களுக்கு தேவையான அனைத்துவகை மருந்துகளும் கிடைக்கின்றன.
தொழில் வாய்ப்புகள்:
மக்கள் மருந்தகங்களில் வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் அதிகம்உள்ளன. தகுதியானவர்கள் மருந்தகத்தை திறக்க விண்ணப்பிக்கலாம் அல்லது மருந்தகங்களில் மருந்தாளராக (Pharmacist) வேலை செய்யலாம். இதனால், அவர்கள் தங்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை பெற முடியும்.
சுகாதாரத்தில் மக்களின் நலன்:
மக்கள் மருந்தகம் திட்டம், நாட்டின் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்குவகிக்கிறது. மலிவான விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதால், மக்கள் குறைவான செலவில், நோய்களை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடிகிறது. இதனால், பொது மக்களின் ஆரோக்கியம் மேம்பட்டு, நாட்டின் சுகாதார நிலைகுறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது.
மக்களுக்கு வேண்டுகோள்:
மக்கள் மருந்தகம் ஒரு புரட்சிகரமான திட்டம் நாம் இதனை பயன்படுத்துவதோடு எல்லோருக்கும் இதை பற்றிய விழிப்புணர்வை பரப்புவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
மக்கள் மருந்தகங்களை பயன்படுத்தி, உங்கள் மருத்துவ செலவுகளை குறைத்து, ஆரோக்கியமாக வாழுங்கள். இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் பகிர்ந்து, அவர்களும் பயன்பெற உதவுங்கள்.
நன்றி!
பயனுள்ள வலைதள முகவரிகள்:-
1. https://janaushadhi.gov.in/
2. https://janaushadhi.gov.in/Data/PMBJP%20Product.pdf
3. https://janaushadhi.gov.in/data/pmbjp-book.pdf
4. https://janaushadhi.gov.in/online_registration.aspx
5. https://janaushadhi.gov.in/pdf/Updated%20Guideline%20for%20opening%20PMBJP%20Kendra_12122023.pdf
6. https://web.umang.gov.in/landing/department/jan-aushadhi-sugam.html
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.