ஒரு எளிய விளக்கம்:-
பொருளாதார கட்டமைப்பு மற்றும் பொருளாதார அமைப்புகள் உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக செயல்படுகின்றன. இவை பொருளாதார சித்தாந்தங்களை அடிப்படையாகக்கொண்டு இயங்குகின்றன.
பொருளாதார சித்தாந்தங்கள் பல இருந்தாலும் அவற்றில் முதலாளித்துவம் (Capitalism), சமவுடைமை (Socialism), மற்றும் பொதுவுடைமை (Communism) ஆகிய மூன்று மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டவை மற்றும் பெருமளவு தாக்கங்களை நாடுகளிலும் அங்கு வாழும் மக்களிடமும் ஏற்படுத்தக்கூடிய திறன் கொண்டவை.
அறிமுகம்
இம்மூன்று பொருளாதார சித்தாந்தங்களை பற்றி சற்று விரிவாக தெரிந்து கொள்வோம். அவற்றின் சாதக பாதகங்கள், வரலாற்று பின்னணி ஆகியவற்றை ஆராய்ந்து எது சிறந்தது என பார்ப்போம்.
முதலாளித்துவம் (Capitalism)
முதலாளித்துவம் என்பது தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் அமைப்பு ஆகும். இதில் தனிநபர்கள் தங்கள் சொத்துக்களை வைத்திருப்பதற்கும், வணிகம் நடத்துவதற்கும் முழு சுதந்திரம் உண்டு.
வரலாற்று பின்னணி
முதலாளித்துவம் 18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொழில்துறை புரட்சியின் போது உருவானது. தொழில்துறை வளர்ச்சியால் தனிநபர் சொத்து உரிமை மற்றும் வணிக சுதந்திரம் முக்கியமானவை ஆனது.
குணாதிசயங்கள்:
• தனிநபர் சொத்து உரிமை
• வணிக சுதந்திரம்
• வாணிபப்போட்டி
பின்பற்றும் நாடுகள்: அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர்
நன்மைகள்:
• புதுமை மற்றும் வளர்ச்சி
• பொருளாதார வளர்ச்சி
• புதிய கண்டுபிடிப்புகள்
குறைபாடுகள்:
• சமூக அநீதி
• பணக்கார மற்றும் ஏழை இடையிலான பெரும் இடைவெளி
சமவுடைமை (Socialism)
சமவுடைமை என்பது அரசாங்கம் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் அமைப்பு ஆகும். இதில் பொதுமக்கள் நலனுக்காக சொத்துக்கள் மற்றும் வளங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
வரலாற்று பின்னணி
சமவுடைமை 19ஆம் நூற்றாண்டில் தொழிலாளர் இயக்கங்களின் மூலம் உருவானது. தொழிலாளர்களின் நலனுக்காக சமத்துவம் மற்றும் பொதுச் சொத்து உரிமை முக்கியமானவை ஆனது.
குணாதிசயங்கள்:
• பொதுச் சொத்து உரிமை
• சமத்துவம்
• அரசு கட்டுப்பாடு
பின்பற்றும் நாடுகள்: கியூபா, ஸ்வீடன், நார்வே,
நன்மைகள்:
• சமத்துவம்
• சமூக நலன்
குறைபாடுகள்:
• குறைந்த போட்டி
• பொருளாதார வளர்ச்சியில் மந்தம்
பொதுவுடைமை (Communism)
பொதுவுடைமை என்பது முழுமையான சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார அமைப்பு ஆகும். இதில் அனைத்து சொத்துக்களும் மற்றும் வளங்களும் பொதுமக்கள் மத்தியில் சமமாக பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
வரலாற்று பின்னணி
பொதுவுடைமை: பொதுவுடைமை 20ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவில் நடந்த அக்டோபர் புரட்சியின் மூலம் உருவானது. முழுமையான சமத்துவம் மற்றும் அரசுக்கட்டுப்பாடு இதன் முக்கிய கோட்பாடுகள்.
குணாதிசயங்கள்:
• முழுமையான சமத்துவம்
• தனிநபர் சொத்து உரிமை இல்லை
• அரசு முழுமையான கட்டுப்பாடு
பின்பற்றும் நாடுகள்: சீனா, வட கொரியா, லாவோஸ்
நன்மைகள்:
• முழுமையான சமத்துவம்
• சமூக நலன்
குறைபாடுகள்:
• குறைந்த தனிநபர் சுதந்திரம்
• பொருளாதார வளர்ச்சியில் மந்தம்
முதலாளித்துவம் (Capitalism), சமவுடைமை (Socialism), மற்றும் பொதுவுடைமை (Communism) ஆகிய மூன்று பொருளாதார அமைப்புகளும் தங்கள் தனித்தன்மை மற்றும் பலவீனங்களை கொண்டுள்ளன. ஒவ்வொரு சித்தாந்தமும் நிறைகுறைகளை கொண்டுள்ளது, மேலும் அவை எந்த நாட்டில் செயல்படுகின்றன என்பதையும் பொருத்து வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
மூன்றையும் சீர்தூக்கி பார்த்து அவற்றிலுள்ள நிறைகளை எடுத்துக்கொண்டு குறைகளை தவிர்ப்பதன் மூலம் ஒரு நாடும் அதன் மக்களும் வளம் பெற முடியும். அரசும் பொருளாதார வல்லுனர்களும் காய்த்தல் உவத்தல் இன்றி இம்மூன்று பொருளாதார சித்தாத்தங்களில் உள்ள நன்மைகளை அமல்படுத்தினால் வறுமை குறைந்து, வளம் பெருகி, மக்கள் இடையே நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மறையும்.
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.