இன்று AI ஒரு முக்கியமான தொழில்நுட்பமாகப் பேசப்படுகிறது. ஆனால், AI உடன் நம்முடைய தனிப்பட்ட தகவல்களை பகிரக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். புகழ்பெற்ற தமிழ் திரைப்படமான எந்திரன்படத்தில் வருவது போல, AI உணர்ச்சிகள் கொண்டது மற்றும் சுயமாக செயல்படக்கூடிய நிலைக்கு போகும் அபாயம் உள்ளது.
நாம் இப்பொழுது பயன்படுத்தும் பல இலவச சேவைகள் நமக்கு உதவிகரமாக தோன்றினாலும், அவற்றில் நம்மிடமிருந்து ஏதாவது ஒன்றைப் பெறுவதற்கான நோக்கம் உள்ளது.
முக்கியத்துவம்:
இன்றைய காலகட்டத்தில் AI-யை முழுமையாகத் தவிர்க்க முடியாது. தற்போதைய நிலைப்படி, சுமார் 30 முதல் 40 சதவீத மக்கள் AI-ஐ பயன்படுத்தினால், எதிர்காலத்தில் அனைவரும் அதனை பயன்படுத்த வேண்டிய நிலை வரும். AI இல்லாமல் வாழ முடியாத சூழ்நிலை உருவாகும். எனவே, இதனைப் பற்றிய விழிப்புணர்வு தேவை.
- வேலை சார்ந்த உதவிகளுக்காக மட்டுமே பயன்படுத்தவும்.
- சந்தேகங்களை தெளிவுபடுத்த பயன்படுத்தவும்.
- நட்பாக பயன்படுத்தலாம், ஆனால் அளவுக்கு மிஞ்சாமல் (அது உங்கள் குறிக்கோள்களை முழுமையாகப் புரிந்துகொள்ளும் நிலைக்கு வருவதற்கு முன்பு நிறுத்தவும்).
ஆன்லைன் சந்தைகள் மற்றும் சேவைகள்:
இப்போது எல்லாம் ஆன்லைனில் கிடைக்கக்கூடிய காரணமாக, உங்கள் தனிப்பட்ட தகவல்கள் எங்கு வேண்டுமானாலும் பரவ வாய்ப்புண்டு.
இலவசம் என்றால் எப்போதும் இலவசம் அல்ல:
இலவச சேவைகள் பற்றி நாம் நன்கு சிந்திக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் கட்சிகள் வழங்கும் வாக்குறுதிகள் போல, பெரிய நிறுவனங்களும் நமக்கு ‘இலவச’ சேவைகளை வழங்கி நம்மிடமிருந்து தகவல்களைப் பெற்று விடுகின்றன.
- Google: விளம்பரங்கள் மூலம் உங்களைப் பற்றி அறிந்து, உங்களின் வாங்கும் முடிவுகளைத் தீர்மானிக்க உதவுகின்றது.
- Facebook: இதுவும் அதேபோல், உங்களது பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு விளம்பரங்களை காட்டுகின்றது.
AI-ஐ பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள்:
தனிப்பட்ட மற்றும் முக்கியமான தகவல்களை AI க்கு பகிர வேண்டாம். பெரும்பாலான AI தரவுகளை பொதுவான இடத்தில் சேமித்து பயன்படுத்துகின்றன. அதனால், பயன்படுத்துவதற்கு முன் அவற்றின் பயன்கள் மற்றும் தேவைகளை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
உங்கள் தனிப்பட்ட தகவல்களை ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள். AI-ஐ பயன்படுத்தும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.