சரி இப்போ இந்த தொகுப்புல பாப்போம்
பொதுவா எப்போ நம்ம சிலர்கூட பேச ஆரம்பிச்ச உடனே நமக்குள்ள ஒரு vibe செட் ஆகும். அவங்களோட பேசுற பேச்சு நமக்கு பிடிக்கும். நாம பேசுறதுக்கு ஒத்துபோய் பேசுறது இது மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கு. நண்பர்கள் எப்படி நெருக்கம் ஆகறாங்கனு கேட்ட எக்ஸாக்ட் சொல்ல வராது. சரி இப்போ கேள்விகுள்ள போகலாம்.
அவங்க நம்மகிட்ட எப்படி இருக்கனும் நினைக்கறது முழுக்க முழுக்க அவங்களோட விருப்பம். நீ நூறு சதவீதம் உன்னோட பக்கம் இருந்து தரனா அவுங்களும் அதே மாதிரி தரணும் இல்லை. இது புரியவே இவ்வளோ நாள் ஆகியிருக்கு. இந்த புரிதல் வர்றதுக்கு கால அவகாசம் தேவைபட்டு இருக்கு. என்னோட பார்வைல இருந்து என்ன நினைச்சுட்டு இருந்தேன்னா ஒருத்தங்க அன்பு தாரங்களா அதே அன்பு நீ தரணும் அப்டி இல்லைனா அந்த நட்புக்கு நீ சரியான ஆளு இல்லைனு நினைச்சிருக்கேன் ஒரு காலத்துல. அதுக்காகவே நீ நூறு சதவீதம் கொடுக்கணும்னுஎனக்குள்ளே நினைச்சிப்பேன். இப்போ யோசிச்சு பாத்தா சிரிப்பு வருது எதை வச்சு என்ன நானே டெஸ்ட் பண்ணேன்தெரில.
அப்படி எதிர்பார்ப்புகள் இருப்பது தவறா? கேட்கலாம்? தவறு இல்லை. அதே சமயம் நம்ம எதிர்பாக்கறது நடக்கணும் அவசியமு இல்லை.
முதல்ல ஒரு விஷயம் நண்பர்களோட இருக்கும்போது தான் நம்ம நம்மளா இருப்போம். எந்த ஒரு முகமூடி போட்டு பேசணும் இருக்கணும் இல்லை. அப்படி இருக்கர அப்போ அவங்கள அவங்கள்லா இருக்க விட்றதுக்கு நம்ம அனுமதி கொடுக்கணும்னு இல்லை.
அதே சமயம் இந்த மாதிரி அந்த மாதிரி எதிர்பாக்கணும் இல்லை. அவங்கள இருக்கறப்போ உங்கிட்ட நூறு சதவீதம் அன்பு கொடுத்தா உன்னோட பக்கம் நீயா இருக்கிறப்போ நீ நூறு சதவீதம் கொடுப்ப. இதுல compare செய்றதுக்கு அங்க இடம் இல்லை.
சில விஷயங்கள் அவங்க உங்கிட்ட இருந்து பகிராம இருக்கலாம். ஆனா நீ எல்லாமே பகிரலாம் அப்போ நானு அதே எதிர்ப்பாகிறதுல தப்பு இல்லைல கேட்கலாம்? ஆனா அவங்களுக்குக்கான காரணங்கள் இருக்கலாம். அதனால சொல்லாம இருக்கலாம். இதை சரியான விதத்துல புரிஞ்சிகிட்டா இந்த கேள்வி நமக்குள்ள வராது எப்போவுமே.
நான் எப்படி என்னோட நண்பர்கள் கிட்ட இருக்கிறேனோ அதே மாதிரி அவங்க என்கிட்ட இருக்கணும்னு எதிர்பாக்கறது சரியா? தப்பா? இந்த கேள்வியே தப்பு.
By, செல்வா வித்யா. மு
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.