தர்மதுரை படத்தில் வரும் "சுபா" கதாபாத்திரம் ஓர் ஆணின் வாழ்க்கையை மாற்றுவது போல நம் எல்லோர் வாழ்விலும் ஒரு சுபா உண்டு. அப்படிப்பட்ட சுபாவால் வாழ்க்கையில் நலம் பெற்றவர்கள் ஓர் ஆணாகவோ அல்லது ஒரு பெண்ணாகவோ இருக்கலாம். அப்படி ஒரு சுபாவைச் சார்ந்த புதினம் தான் இது.
இந்த சுபாவின் நட்பு எங்கே தொடங்குகிறது என்றால், பால்ய பருவத்தில் தொடங்கி பதின்ம பருவம் என எல்லா இடங்களிலும் நிழல் போல தொடர்ந்து வருகிறது.
பள்ளிக்கூடத்தில் ஒன்றாக கேன்டீன் செல்வது, புரியாத பாடங்களை ஆசிரியர் நடத்தும்பொழுது முனு முனுத்து பேசிக்கொள்வது, முந்தைய நாள் வீட்டில் பார்த்த தொலைக்காட்சி நாடகங்களை பற்றி விவரிப்பது மற்றும் கடினமான பாடங்கள் படிக்க ஒருவர் மாற்றி ஒருவர் புரிய வைப்பது என அன்பின் பல பரிமாணங்களில் தொடர்கிறது இந்த நட்பு. பள்ளிக்கூடத்தில் இதற்கு ஓர் இறுதி அத்தியாயம் வந்துவிட்டது அது தான் பன்னிரண்டாம் வகுப்பு. இப்போதும் விடைபெற இயலாது அதீத அன்புடன் விடைபெறுகிறது இந்த சுபாவின் நட்பு. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் இல்லாத காலக்கட்டம் அது, நாள்தோறும் பள்ளியில் சந்தித்து எல்லாவற்றையும் பகிர்ந்து மகிழ்ந்தது முதல் இப்பொழுது என்றாவது ஒருநாள் தொலைபேசியில் பேசிக்கொள்ளும் வரை எதுவும் மாறவில்லை. அந்த பால்ய பருவத்தில் உள்ள அன்பு அப்படியே இருக்கிறது. பிரிந்ததாய் போன்ற உணர்வு எதுவும் தோன்றவில்லை, அணு அளவும் குறையாத அந்த அன்பில். வெவ்வேறு கல்லூரி வேறு வேறு துறைகள் என காலம் இருவேறு மாற்றுத்திசையில் இவர்களை பயணிக்க வைத்தாலும் நட்பில் மாற்றம் ஏதும் நிகழவில்லை. இது இரு பெண்களின் நட்பு என்பதால் இதில் புதியதாய் களமிரங்கும் கதாபாத்திரம் தான் “திருமணம்”. இதைத்தான் தலைப்பில் குறிப்பிட்டு இருந்தேன் “கல்யாணக் காட்டினில் தொலைந்தோமே” என்று. இந்த இரு வேறு அமைப்பினரும் திருமணம் என்னும் பந்தத்தினால் பிரிந்து சென்றார்ங்கள் என்பதே நிதர்சனம்.
உங்கள் செல்வ மீனா. ரா..
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.