பறவைகள் பலவிதம் அதில் ஓவ்வொன்றும் ஒருவிதம் இந்த வரி நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். அதே மாதிரி மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒருவிதம். இத எப்படி தெரிஞ்சிக்கறது? அந்த ஒரு ஒரு விதம் எப்படி பாக்கறது? இந்த மாதிரி கேள்விகள் எனக்குள்ள வரும். அதுக்கு நானே எனக்கு பதில் கொடுத்தேன். உனக்கு கோவம் வரப்போ உனக்கு கோவம் வருதுனு உனக்குள்ள ஒரு குரல் சொல்லும் அப்போ அந்த குரல் மூன்றாவது மனிதன் மாதிரி என்னோட பிரச்னையை வெளில இருந்து பாத்துட்டு சொல்ற குரல். அதனால அதே மாதிரி மனிதர்கள் ஒரு ஒரு விதம் அப்டின்றதா ஏன் நீ வெளில இருந்து கவனிக்க கூடாது தோணுச்சு. அவங்க ஏன் அப்படி பேசறாங்கனு சட்டுனு ஒரு தீர்வுக்கு வந்துருவேன். ஆனா எப்போ கவனிக்க தொடங்குனேனோ அப்போவே நிறைய கேள்விகள் வந்தது எனக்குள்ள ஒரு காரணம் இருக்கு எல்லாத்துக்கு பின்னாடியும் அந்த காரணங்கள் அவங்களுக்கு சரியா இருக்கும் கேட்கறவங்களுக்கு தப்பா இருக்கும்.
அதை கவனிக்கறவங்களுக்கு ஒரு விதமான மனிதர்களின் புரிதல்கள் இருக்கும். இந்த தொகுப்புல என்ன பாக்க போறோம்?
Mother and child
பேருந்துல பயணம் செய்ற அப்போ காலி இடங்கள் நிறைய இருக்கு. அதனால எனக்கு பிடித்த ஒரு சன்னல் ஓரம் இருக்கைல உக்காந்து இருந்தேன். அப்போ ஒரு குழந்தை, அம்மா பேருந்துல ஏறுனாங்க குழந்தைக்கு சன்னல் ஓரம் இருக்கைக்கு உக்காரனும் ஆசை அதே மாதிரி இருந்தது ஆனா சன்னல் திறக்க முடில அதனால என்னோட பக்கத்துல வந்து உக்காந்து இருந்தாங்க அந்த சமயம் எனக்கு தோணல என்னோட இருக்கை கொடுக்கணும்னு எதனால தோணல தெரில. கொஞ்சம் நேரம் அப்பறம் அவங்க ரெண்டு பேரும் எனக்கு முன்னாடி இருந்தா இருக்கைல உக்காந்து சன்னல் தொறந்து அப்படியே போயிட்டே இருந்தாங்க. இது எல்லாமே நான் கவனிச்சுட்டே இருந்தேன். ஏன் நீ சன்னல் ஒரே இருக்கை கொடுக்கலைனு? எனக்குள்ள ஒரு கேள்வி இருந்தது.
அதே சமயம் இதை பாத்திட்டு இருக்கிறவங்களுக்கு வேறு விதமா தோணிருக்கலாம் கண்டிப்பா. இதை வாசிச்சுட்டு இருக்கிறவங்களுக்கு ஒரு விதமா தோணலாம்.
அவங்க இவங்க நினைக்கறதுக்கு நீ பதில் கொடுக்கனும்மா? அது உன்னால முடியுமா எல்லார்கிட்டையும் போய் விளக்கம் கொடுக்க முடியுமா?
கண்டிப்பா முடியாது அப்போ உனக்கு நீ பதில் சொல்லு?
ஆனா என்ன தோணுச்சுன்னா நிறைய இருக்கைகள் இருந்ததால எனக்கு கொடுக்க தோணல. இது என்கிட்ட இருந்த நியாங்கள்.
Grandfather
அப்படியே அந்த பேருந்து போயிட்டே இருந்தது சிறிது நேரம் கழிச்சு ரொம்ப கூட்டமா இருந்தது. அப்போ ஒரு தாத்தா, என்னோட முன்னாடி இருந்த இருக்கைகள் காலி ஆனது. அப்போ அந்த தாத்தா உக்கார போனாங்க அதுக்கு முன்னாடி சில பொண்ணுக உக்காந்துட்டாங்க. அதனால அவருக்கு உக்கார முடில. அப்போ தாத்தா சொன்னாரு எனக்கு கால் வலிக்கி நிக்க முடில்லனு. அதை யாரும் கண்டுக்கிடலா அவங்க மனைவி உட்பட. அப்போ நான் கேட்டேன் அவங்க மனைவி கிட்ட நீங்க எங்க போகணும்னு இந்த மாதிரி ஒரு இடம் சொன்னாங்க. அது நான் போகுறதுக்கு அரை மணி நேரம் முன்னாடி வந்துரும். சரி உங்க கணவரை நீங்க என்னோட இருக்கைல உக்கார சொல்லுங்க நா நிக்குறேன் சொன்னேன். அதுக்கு அந்த பாட்டி வேண்டாம் சொன்னாங்க. உடனே அவங்க கணவரை கிட்ட இந்தாங்க அந்த பாட்டியோட இருக்கைல உக்காருங்க சொன்னாங்க. ஆனா அந்த தாத்தா வேண்டாம் நீ உக்காரு சொல்லிட்டாங்க. இதை கவனிச்சிட்டு இருந்தேன். உடனே அவங்க கிட்ட ஏதும் கேக்காம நா எந்திச்சிட்டேன் இதுல உக்காருங்கனு தாத்தா கிட்ட சொல்லிட்டேன். அப்புறம் அவரு உக்காந்துட்டாரு. நா ஒரு அரை மணி நேரம் நின்னுட்டு இருந்தேன் அப்றம் எனக்கு இருக்கை கிடைச்சது நா உக்காந்துட்டேன். அப்போ என்னோட பக்கத்துல ஒரு தாத்தா பேசிட்டு வந்தாங்க நானும் பேசிட்டு வந்தேன் ஒரு மணி நேரம் இருக்கோம். அவங்க இறங்குற இடம் வந்துட்டு இறங்கும்போது எனக்கு நன்றி சொல்லிட்டு போனாங்க அப்போ எனக்கு ஒரு கேள்வி வந்தது? ஏன் இந்த தாத்தா நன்றி சொல்ராங்க? நா எதிர்பாத்தது அந்த தாத்தாகிட்ட ஆனா அவரு எதுமே சொல்லல. அப்போ ஒரு விஷயம் புரிஞ்சது நம்ம எதிர்ப்பாத்தா அது கிடைக்கும் கிடைக்காது ஆனா நமக்கு வர வேண்டியது கண்டிப்பா நமக்கு வந்துரும் வேறு விதமா. உடனே இந்த நிகழ்ச்சியை ஒரு மூன்றாவது மனிதரா இருந்து பாத்தேன். அவரு நன்றி சொல்ல பாத்திருக்கலாம். வாய்ப்பு இருந்து இருக்காது இது அந்த தாத்தா பக்கம் நியாங்களா இருக்கலாம். எனக்கு அந்த குழந்தைகிட்ட இருந்த என்னோட நியாங்கள் மாதிரி.
மனிதர்கள் ஒரு ஒரு விதம் அப்படியே சூழ்நிலைக்கு ஏற்றவாறே நியாங்கள்.
By
Selva vidhya M
👉https://www.youtube.com/@DualTonePoetry
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.