நம்ம நிம்மதியா இருக்கிறோமா? பணம் இருந்தா சந்தோசமா இருக்கலாமா? பணம் இருந்தா நிம்மதி வருமா?
முதல் அடிப்படையான விஷயம் பணம் அதை மறுக்கவில்லை.
அதே சமயம் பணம் மட்டுமே எல்லாம் இல்லை.
சந்தோசம் மற்றும் நிம்மதி இந்த ரெண்டு முக்கியமான விஷயங்களை இந்த தொகுப்புல பாக்கலாம்
சந்தோஷம்
முதல்ல நாம எப்போ சந்தோசமா இருந்தோம் அப்படி னு கேட்டா உடனே நம்ம மனசுல வர்றது என்னோட நண்பர்கள் கூட இருக்கோம் போது சிலர் சொல்லுவாங்க மற்றும் சிலர் என்னோட குடும்பம் கூட இருக்கற அப்போ சந்தோசமா இருப்பேன் சொல்லுவாங்க இன்னும் சிலர் நானு என்னோட ஸ்கூல் நாட்கள்ல ஜாலியா சந்தோசமா இருந்தேன் சொல்லுவாங்க. அப்போ இதுல எல்லாமே ஒரு விஷயம் ஒற்றுமை இருக்கு. அது என்ன? நமக்கு பிடிச்ச விஷயம் அது ஒரு உறவுமுறைல இருக்கு. அவங்க மேல இருக்க ஒரு விதமான அன்பு நம்மள எப்போவுமே சந்தோசமா வச்சியூர்க்கும்.
இன்னும் பலர் எனக்கு பிடிச்ச விஷயத்தை நான் செய்யறப்போ நான் சந்தோசமா இருப்பேன். பிடிச்ச விஷயம் அப்டினா? எனக்கு பிடித்தமான பொருள்கள் வாங்கும்போது? அப்போ இங்க தான் பணம் அப்டினு ஒரு விஷயம் வருது சரி. எங்கிட்ட காசு இருக்கு நான் வாங்கிட்டேன் இப்போ சந்தோசமா இருக்கேன். மறுப்பக்கம் ஒரு வேல என்கிட்ட காசு இல்லை அப்போ நான் சந்தோசமா இல்லை. அதை வாங்குற வரையில் என்கிட்ட சந்தோசம் இல்லை. நம்ம சந்தோசமா இருக்கறது நம்ம கையில இருக்கு. இது இருந்த நான் சந்தோசமா இருப்பேன் அப்ட்னு ஒரு வரைமுறையில் நம்மல நாமே கட்டுப்படுத்தாம இப்போ என்கிட்ட என்ன இருக்கோ அதை வச்சு நான் சந்தோசமா இருப்பேன் அப்ட்னு கத்துக்கிட்டா சந்தோசம் மற்றும் நிம்மதி தானா வரும் நம்மகிட்ட. இது எல்லாமே பணம் இருக்கும் பேசுறவங்ககிட்ட அதனால தான் கருத்து பேசுவாங்க அப்ட்னு நினைக்கலாம். ஆனால் நடைமுறைக்கு இது செட் ஆகாது சொல்லலாம். இந்த கருத்தை சொல்ரதுக்கு பணம் தேவை இல்லை. வாழ்கின்ற வாழ்க்கைல சற்று புரிதல் இருந்தாலே போதுமானது.
நிம்மதி
நிம்மதி அப்டினா என்ன? இந்த கேள்வி நிறைய பேருகிட்ட கேட்டா அதற்கு பதில் சொல்ல தெரில ஏன்னு கேட்டா முதல்ல நிம்மதின்னா என்னனு தெரில இன்னும் சிலர் நிறைய சம்பாதிச்சிட்டு ஒரு கிராமத்துல போய் செட்டில் ஆகறது நிம்மதி சொல்ராங்க. இதை கேட்டா ஒருபுறம் சிரிப்பு வருது மறுபக்கம் அவங்களோட புரிதல் அப்டினு தோணுது. சரி அப்போ நிம்மதின்னா என்ன? அறுபது வயசுல வருமா அப்போதான் நிம்மதி வருமா? அது என்ன நோய்யா அந்த வயசுல வரதுக்கு? நிம்மதி அப்டிங்குறது நம்ம கூடாதாங்க இருக்கு அதை யாரும் கவனிக்க விரும்பல. அப்படி கவனிச்சாலும் கண்டுக்கறது இல்லை. அதுக்கு அப்பறம் நான் நிம்மதியவே இல்லைனு சொல்ரது. அப்படி சொல்லி எந்த பிரோச்சனமும் இல்லை. போதும் என்ற மனமே! இதை யாரு சரியாய் புரிஞ்சிக்கிறாங்களோ அவங்க வாழ்க்கைல எப்போவுமே நிம்மதியா இருக்கலாம். அப்போ கேக்கலாம் ஆசை படக்கூடாத? அது தப்பான்னு? அப்படி இல்லைங்க ஆசை படறது எல்லாமே இருந்தாதான் நிம்மதி எனக்கு கிடைக்கும் நினைக்கறது தப்பு? இப்போ என்கிட்ட என்ன இருக்கு அதை வச்சு நான் நிம்மதியா இருப்பேன் என்ற வாழ்க்கையின் புரிதல் இருந்தால் போதுமானது.
நான் கூறிய கருத்துகள் வாசிப்பவர்கள் கண்ணணோட்டத்தில் வேறு படலாம். ஆனால் மேல் கூறிய அனைத்தும் என்னுடைய கண்ணோட்டத்தில் நான் புரிந்த புரிதல்கள்
by,
செல்வ வித்யா.மு
Images:
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.