வணக்கம் மை டியர் வாசகர்களே கடந்த 9 அத்தியாயங்களில் என்னால முடிஞ்ச வரைக்கும் எங்களோட வாழ்க்கையை பத்தியும் நாங்க வளர்ந்த விதத்தை பற்றியும் ஏதோ எனக்கு தெரிஞ்ச மாதிரி ஓரளவுக்கு சொல்லி இருக்கேன் !!! அவ்வளவுதானா உங்களோட வாழ்க்கை ? அப்படின்னு நீங்க கேட்கறது எனக்கு தெரியுது. இருந்தாலும் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் நம்மால ஒரே டைம்ல சொல்லிர முடியாது. ஒரு சில முக்கியமான நிகழ்வுகளை கொஞ்சம் சுவாரசியமா சொல்ல ட்ரை பண்ணி இருந்தேன்!!!
அந்த வகையில இன்னைக்கு அத்தியாயத்தில எங்க ஊர்ல நடக்கிற சில முக்கியமான திருவிழாக்களையும்; அதுல வர்ற சுவாரசியங்களையும் பத்தி பாப்போம் எங்களை பொறுத்த வரைக்கும் மிக முக்கியமான திருவிழா “அய்யர்மலை தேர் திருவிழா”, “பாம்பலம்மன் கோவில் திருவிழா” இது போக “கரூர் மாரியம்மன் கோயில் திருவிழா”!!! இதுதான் மிக முக்கியமான திருவிழாக்கள்.
அய்யர்மலை தேர் திருவிழா!
அய்யர்மலை தேர் திருவிழாவை பற்றி சொல்லனும்னா அது ஒரு 'பிரம்மாண்டம்' என்று சொல்லலாம்!!! அய்யர்மலை தேர் திருவிழா இது மொத்தமா ஒரு பத்து பதினைந்து நாள் நடக்கும் முக்கியமா திருவிழா. மூணு நாள் சிறப்பா நடக்கும். ' திருவிழாக்கு கொடியேற்றி; அடுத்த ஒரு வாரத்துல சாமிக்கு கல்யாணம் நடக்கும்; அது முடிஞ்சு கோவிலை சுத்தி வழி நெடுக கடைகள் போட ஆரம்பிச்சி இருப்பாங்க..!' திருவிழா நெருங்கும் போது இம்மி இடம் இல்லாமல் மக்கள் கூட்டம் அலைமோதும்..! நாங்கல்லாம் தேர் இழுப்பதற்காக முன்னாடி நாளே போயிருவோம்.!! அங்க போய் தங்கறதுக்கு இடம் புடிச்சிட்டு பசங்களோட சேர்ந்து மலையவே சுத்தி வந்துட்டு இஷ்டப்பட்டதெல்லாம் சாப்பிட்டு, பார்க்கிறது எல்லாம் விளையாண்டுட்டு, ராட்டினம் எல்லாம் சுத்திக்கிட்டு மீண்டும் தூங்குகிற இடத்துக்கு வருவதற்கு 11, 12 ஆயிடும். வந்தா ஒரு மணி, இரண்டு மணி வாக்குல குதிரை தேர் வரும் மலையை சுத்தி உற்சவர் கிரிவலம் வருவார் !!
அதை முடிச்சு அதிகாலையில் எந்திரிச்சு குளிச்சிட்டு புது சட்டை எல்லாம் போட்டுட்டு தேர் இழுக்க கிளம்பிருவோம்..! அந்த தேர் டன் கணக்குல மரத்தாலையும்; இரும்பாலையும் செய்யப்பட்டு; கலர் கலர் துணிகளால அலங்கரிச்சு; குதிரைகளை பூட்டி வடம் பிடிக்க தயாராக இருக்கும்.!!! இருந்தாலும் அந்த தேரையே நாங்க தான் இழுக்கிறதா நினைச்சுட்டு அந்தப் பெரிய சங்கிலிய கையில புடிச்சாலே பெரிய அதிர்ஷ்டம் தான் ! அவ்வளவு கும்பல்ல வடம் புடிச்சு இழுத்து கொஞ்ச தூரம் போய் அந்த கும்பல்ல இருந்து வெளியே வந்து அப்பாடின்னு பெருமூச்சு விடுவோம் !! இப்போ அந்த தேர் நகர்ந்து வர்றது நினைச்சாலும் என் உடம்பெல்லாம் சிலிர்க்க வைக்கிறது!!! தேர் மலையை சுத்தி வருவதற்கு மூணு நாள் ஆகும். மக்கள் வெள்ளம் என திரண்டு வந்து மூன்று நாளும் மாத்தி மாத்தி இழுத்து தேர மூணாம் நாள் நிலைக்கு கொண்டு வருவாங்க. அய்யர்மலை திருவிழா நாளே ஷேர் மிட்டாயும், பொம்மை கடைகளும் தான் அதிகம்.!!
பாம்பலம்மன் திருவிழா!
இப்படியே ஐயர் மலை திருவிழா முடிய அடுத்ததா பாம்பலம்மன் திருவிழா மே மாசத்துல எல்லாருக்கும் பள்ளி விடுமுறையா இருக்கும் அதுவே பெரிய சந்தோஷம். மே மாத கடைசியில் இந்த பாம்பலம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடக்கும்... இங்கயும் 15 நாளைக்கு முன்னாடியே கம்பத்த நட்டு; ஒரு வாரத்துக்கு முன்னாடி பால் குடம் எடுப்பாங்க! அப்புறம் டெய்லி ஒரு பூச்சொரிதல் விழா நடக்கும்!! இங்கேயும் திருவிழா மூணு நாளைக்கு நடக்கும் முதல் நாள் இரவு கரகம் பாலித்து; இரண்டாம் நாள் அக்னி சட்டி, அலகுனு பக்தர்கள் தங்களோட நேர்த்திக்கடன் செலுத்துவாங்க ; மூன்றாம் நாள் கிடா, சேவல், கோழின்னு அசைவ விருந்து போட்டு குதூகலமா இருக்கும்...!
இதுல ஹைலைட் எல்லாம் இரண்டாம் நாள் மாலை எங்களோட சீனியர்ஸ் நண்பன் நற்பணி மன்றம் சார்பாக எங்க ஊர ரெப்ரசென்ட் பண்ற மாதிரி வண்டி வேஷம்; மாவிளக்கு; தண்ணீர் பந்தல்-னு ஏதாவது ஒன்னு அரேஞ்ச் பண்ணி இருப்பாங்க !!! நாங்க அவங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு அந்த அரேஞ்ச்மெண்ட்ல வைக்கிற ட்ரம் செட்டுக்கு ஆடுவோம் பாருங்க ஒரு ஆட்டம் 🤩 இவ்ளோதான் இல்ல..! சிறுசு, பெருசுனு எந்த கணக்கும் இல்லை எல்லாரும் இறங்கி ஆடுவோம்...🥳 எவ்வளவு சந்தோஷமா இருக்கும். அதே அளவுக்கு கஷ்டமும் வந்து இருக்கு. ஏதாவது ஒரு சங்கடமான நிலை வந்துட்டே இருக்கும். நம்மளோட மகிழ்ச்சி என்பது இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது...! வரக்கூடிய தொந்தரவுகளை சரி செஞ்சு நமக்கான மகிழ்ச்சிய நாமதான் தக்க வச்சுக்கணும். இப்படி வருஷம் ஒருமுறை நடக்கிற இந்த மூணு நாளைக்காக வருஷம் 300 நாளும் காத்துக்கொண்டிருக்கோம். இந்த மூணு நாள்ல நடக்கிற சின்ன சின்ன பிரச்சனைகளை ஒதுக்கி பெருசா நடக்கும் திருவிழாக்களை
கொண்டாடுவோம்❣️!
கூத்தடிப்போம் !! குதூகளிப்போம் !!!
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.