குமரன் பரிஜாதத்தை சந்திக்கச் செல்லும்போது, அவள் அவனைப் பார்த்தவுடன் கோபமாக, “நீ சில நாட்களாக என்னை சந்திக்கவே இல்லை,” என்று குறை கூறுகிறாள்.
“பரிஜாதம், நான் ஒரு முக்கியமான விஷயத்தில் ஈடுபட்டு இருக்கேன். நான் உன்னை சந்திக்காததை பற்றி வருத்தப்படுகிறேன்,” என்று குமரன் விளக்கினான்.
அவள் மேலும் கோபம்கொண்டு, “என்னை நீ புறக்கணிக்கிறாய். உனக்கு என்ன நடந்துச்சு?” என்று கேட்கிறாள்.
குமரன் கவலையுடன், “நான் உன்னை எப்போதும் நினைச்சிட்டு இருக்கேன். நீ ஒரு நாள் என்னை புரிஞ்சுகுவே,” என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்லத் தொடங்கினான்.
பரிஜாதம் ஓடி வந்து அவனை தழுவி, “குமரா, நீ இல்லாமல் உன்னை பார்க்காமல் என்னால் உயிருடன் வாழமுடியாது,” என கூறி அழ ஆரம்பித்தாள்.
குமரன் அவளின் அன்பில் உருகி, அவளை அணைத்து கொள்கிறான். இருவரும் தங்கள் உண்மை காதலை நினைத்து நெகிழ்கின்றனர்.
“குமரா, என்ன நடந்துச்சு? ஏன் நீ இவ்வளவு சோகமாக இருக்க?” என்று பரிஜாதம் கேட்க, குமரன், தன் குடும்பத்தின் துக்கமான வரலாற்றை அவளிடம் பகிர்ந்தான். பரிஜாதம் கண்ணீர் விட்டாள், “எவ்வளவு கொடுமை?! இதற்கு பழி தீர்க்க வேண்டும் அவசியம். இந்தப் பயணத்தில், நான் உன்னுடன் முழுமையாக இருக்கேன். செங்கதிர் ரத்தினத்தை கண்டுபிடிக்க உனக்கு உதவுவேன்,” என்று உறுதியுடன் சொன்னாள்.
அவள் மேலும், “நாம் உன் நண்பன் கருப்பனின் உதவியைப் பெற வேண்டும். அவன் நிச்சயம் உதவுவான். மேலும், உன் எதிரி அசுரன் மற்றும் அவன் தந்தை பூபதியிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என்று அறிவுறுத்தினாள். குமரன் அவர்களை நினைத்து கோபத்தில் கண்கள் சிவக்கிறான். “தன் தந்தை மற்றும் பாட்டனாரை கொன்ற பாவிகளை ஒழிப்பேன்” என சபதம் எடுக்கிறான்.
அதே நேரத்தில், அசுரனிடம், குமரனின் வீட்டில் ஒட்டுகேட்டதை அல்லக்கை ஒப்பித்துக்கொண்டிருக்கிறான். முழுமையாக கேட்காததால் அவனால் பூரா தகவலையும் சொல்லமுடியவில்லை. அசுரன் அவனை ஓங்கி அறைந்து, சரியான தகவலை சேகரித்து சொல்லும்படி விரட்டுகிறான். ஒரு ஜோடி கண்கள் இதையெல்லாம் ரகசியமாக பார்த்துக்கொண்டிருக்கின்றன.
பாடல்களின் புதிரும் குதிரை வியாபாரியும்

வீட்டிற்கு சென்ற குமரன் தான் கண்டெடுத்த புத்தகத்தை புரட்டி பார்க்கிறான் ஆனால் அதில் பாடல்கள் ஏதும் காணப்படவில்லை. அவன் மிகவும் ஏமாற்றம் அடைந்து தனது ஆசான் கந்தனிடம் எடுத்துச் சென்று புத்தகத்தை காட்டுகிறான். அவருக்கும் ஒன்றும் அகப்படாததால் வருத்தமும் குழப்பமும் அடைந்தார். பின் ஒரு முடிவுக்கு வந்தவராய், “குமரா முதலில் பிராணேஸ்வரரின் அருளை பெறுவது அவசியம். நீ உன் தாய் மற்றும் பாட்டியுடன் நாளை பெருமானை சென்று வழிபட்டு வா. நல்ல வழி புலப்படும்.”
கந்தன் ஆசானின் அறிவுரையைப் பின்பற்றி, குமரன் தனது தாய் தாமரையுடனும் பாட்டி செங்கமலத்துடனும் பத்மேஸ்வரர் கோவிலுக்கு சென்று, தனது பணியில் வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை செய்கிறான். குமரன் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் போது, கோவிலின் பெரிய மணி ஒலிக்கிறது. செங்கமலம் அதை நல்ல சகுனமாக கருதி தனது மகிழ்ச்சியை குமரனுடனும் தாமரையுடனும் பகிர்ந்துகொள்கிறாள். அர்ச்சகர் குமரனுக்கு பத்மேஸ்வரருக்கு சாத்திய மாலையை தந்து அவன் அணைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வாழ்த்துகிறார்.
குமரனும் அசுரனும்

குமரனும் அவரது குடும்பத்தோரும் பத்மேஸ்வரரை வணங்கி விட்டு வெளியே வருகின்றனர். பிரார்த்தனை முடிந்து, அவர்கள் வீட்டிற்கு திரும்பும் வழியில், அசுரனும் அல்லக்கையும் அவர்களை தடுக்கின்றனர். மின்னலும் இடியும்மோதுவதை போன்று குமரனும் அசுரனும் முறைத்து கொண்டனர்.
அசுரன், “குமரா, நீ ஏதோ ஒரு ரகசிய பணியில் ஈடுபட்டு இருக்கிறாய். விரைவில் அதைக் கண்டுபிடிப்பேன்,” என்று சவால் விடுக்கிறான். குமரன், “அசுரா, நீ என்னைத் தடுக்க முடியாது. நான் என் லட்சியத்தை நிறைவேற்றுவேன்,” என்று உறுதியுடன் பதிலளிக்கிறான்.
அசுரன், “நான் இருக்கும் வரை நீ வெற்றி பெற விடமாட்டேன்,” என்று சொல்ல, குமரன், “அப்போது உன்னை இல்லாமல் செய்து விடுகிறேன்,” என அவனை நோக்கி பாய முயல்கிறான்.
அவர்களின் வாய்த்தகராறு தீவிரமாகும் போது, குமரனின் தாயாரும் பாட்டியாரும் அவனை கட்டுப்படுத்தி, அங்கிருந்து அழைத்துச் செல்கிறார்கள். அசுரன், அல்லக்கையை நோக்கி, “குமரனின் நடவடிக்கைகளை கவனமாகக் கண்காணித்து, எனக்கு தகவல் கொடு,” என்று உத்தரவிடுகிறான்.
களரி ஆசான் கந்தனின் அறிவுரை
அந்த நாளின் பிற்பகலில், குமரன் தனது களரி ஆசான் கந்தனை சந்திக்கச் செல்கிறான். கந்தன் அவனை உளமாற வரவேற்று, “குமரா, நீ செங்கதிர் ரத்தினத்தைத் தேட பல இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டும். அதற்காக உனக்கு ஒரு குதிரை தேவை. சிவன் உனக்கு துணை இருப்பார்,” என்று கூறுகிறார். குமரன் அதற்கு சம்மதித்தாலும், குதிரையை எவ்வாறு பெறுவது என்று தெரியாமல் குழப்பமடைகிறான்.
அந்த நேரத்தில், ஒரு சிறிய மேள சத்தம் கேட்கிறது. அது அவர்களின் கிராமத்திற்கு ஒரு குதிரை வியாபாரி வந்ததை அறிவிக்கிறது.
“எல்லோரும் கேளுங்க, நம்ம அழகூருக்கு சீமை குருதைகளோட பெரிய குதிரை வியாபாரி வந்திருக்கார். குதிரை வாங்க விருப்பம் உள்ளவங்க வரலாம் வாங்கலாம். அதோடு குதிரை வியாபாரி ஒரு சிறப்பு அறிவிப்பு செய்ய சொல்லி இருக்கார். அவரோட ஒரு உசந்த ஜாதி குதிரையை யாரு அடக்கறாங்கலோ, அந்த குதிரையை அடக்குபவங்களுக்கு இலவசமாகுடுக்க போறார்,” என்று மேளக்காரன் அறிவிப்பு செய்ய, குமரனும் அவன் ஆசான் கந்தனும் குதூகலம் கொள்கின்றனர். எப்படியாவது முயன்று அந்த குதிரையை அடக்குவது என்று தீர்மானிக்கின்றனர்.
அல்லக்கையும் அந்த அறிவிப்பை கேட்டு, அசுரனிடம் தகவல் சொல்ல ஓடுகிறான். அசுரன் தனது பெரிய மாளிகையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறான். அல்லக்கையின் பெருங்குரலை கேட்ட அசுரன் நிமிர்கிறான்.
அன்புடன் மதன்.
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.