வணக்கம் மக்களே…!
இன்னைக்கு தத்துவம் என்னன்னா படிச்சுகோங்க பொழச்சுகோங்க 😅 அசுரன் சிவசாமி சொன்னது நெசம்தான்… அதனால மீண்டும் சொல்றேன் “படிச்சுகோங்க பொழச்சுகோங்க…!!! ” சரி பொங்கலுக்கு போவோம்… பொங்கல்னா என்னங்க தைத்திருநாள் ; தமிழர் திருநாள்; அறுவடை திருநாள்; இப்படி பல பெயர் இருக்கு… இருந்தாலும் இப்ப இருக்க பொங்கல் எப்படி இருக்குன்னா
முதல் நாள் பெரிய பொங்கல் நமக்கு உணவளிக்கிற இந்த மண்ணுக்கும் அதை உருவாக்கின கதிரவனுக்கு படையல் போடுறது!
இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் உழவனுக்காக உழைக்கிற மாடுகளை கொண்டாடுகிற தினமாக இருக்கு!!
மூன்றாம் நாள் காணும் பொங்கல் என்னால் உறவுகளுடன் கூடி பேசவும் உணவுகளை பகிரவும் நம் முன்னோர்களால் உண்டாக்கப்பட்டது!!! இது பொதுவான பொங்கல்…
எங்க ஊர்ல பொங்கல் எப்படி இருக்கும்னா எங்களுக்கு பொங்கல்னா ஞாபகம் வரது விளையாட்டு போட்டி… இது பொதுவா எல்லா ஊர்கள்ளையும் நடக்கிறது தான் ஒன்னும் புதுசா சொல்லல இருந்தாலும் நான் சொல்றததுனால இது புதுசு தான்!!! எங்களோட சூப்பர் சீனியர்ஸ் ‘தமிழன் நற்பணி மன்றம்‘ தான் இதை தொடங்கினாங்க கிட்டத்தட்ட ஒரு பத்து வருடமா அவங்க இது ரொம்ப சீரும் சிறப்புமாக பண்ணிட்டாங்க…
இப்ப பொறுப்பை எங்ககிட்ட கொடுத்துட்டாங்க…!!! அது எங்க கிட்ட கொடுத்தப்ப நாங்க கொஞ்சம் சின்ன பசங்க இவங்க எப்படிடா இதை எடுத்து பண்ண போறாங்க அப்படிங்கற சந்தேகம் 🤔 எல்லாத்துக்கும் இருந்திருக்கும்… எப்படிடா இப்படி பண்ணுனீங்க அப்படிங்கற மாதிரி திடமான திட்டமும் அற்புதமான ஒருங்கிணைப்பும் எங்ககிட்ட இருந்தது ! அது போதாதுன்னு எங்க சீனியர் ஓட சப்போர்ட்டும் எங்களுக்கு தான் !! பொருளாதார ரீதியாகவும் சரி; செயல்படுத்துதல் ரீதியாகவும் சரி!!! இந்த போட்டிய நாங்க நடத்தணும் அப்படின்னு சொல்லி முடிவு பண்ணும் போது எங்களுக்குள்ளேயே ஏகப்பட்ட பிரச்சனை வேணும்❤️ வேணாம் 😒 இப்படி பண்ணலாம்; அப்படி பண்ணலாம்; பரிசு எல்லாம் எப்படி வாங்கணும்; எந்த மாதிரி விளையாட்டெல்லாம் பண்ணனும்னு நிறைய வாதங்கள் இதையெல்லாம் கடந்து முதலாம் ஆண்டு விளையாட்டு போட்டி 15-01-2020.

நாங்க கொஞ்சம் தனித்துவமா தெரியனும் என்பதற்காக ‘பொங்கல் விளையாட்டு விழா’ அப்படின்னு இருந்தத “தமிழ் மரபுத் திருவிழா” அப்படினு பெயரையே மாற்றி விட்டோம்…🫣 பெயர் மட்டும் மாறல அது கூடவே சேர்ந்து எங்களோட அணுகுமுறையும் மாறுச்சு!!! எங்களோட முக்கியமான குறிக்கோள் என்னவா இருந்ததுன்னா வருஷம் ஃபுல்லா சமைய கட்டிலேயே இருக்கிற அம்மாக்கள்; பெண்டிர் இளைஞிகள்; சிறுமியர்; சிறுவர்கள் அப்படின்னு எல்லாரும் ஒரு நாள் நல்லா சந்தோசமா இருக்கணும்னு நெனச்சோம் !!! அவங்களோட சந்தோசம்தான் எதுல இருக்குன்னா ‘சின்ன சின்ன போட்டியில் ஜெயிச்சு அந்த ஒரு குட்டி பரிசு வாங்குவதிலும்; தன்னுடைய குழந்தை ஒரு சிறிய தட்டு வாங்கினாலும் அது பெற்றோர்களுக்கு அவ்வளவு பெருமையா இருக்கும்’ இதையெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு நாங்க எங்களோட திட்டத்தை செயல்படுத்த ஆரம்பிச்சோம்.

முதல் வருட போட்டி ஏதாவது புதுசா செய்யணும் அப்படின்னு யோசிக்கும் போது எங்களுக்கு தோணின யோசனை தான் பட்டிமன்றம்! எங்க ஊர்ல இருக்க பேச்சாளர்களை வெளிக்கொண்டுவரும் விதமா எங்களுக்குள்ளேயே இரண்டு அணிகளை உண்டாக்கி அதற்கு ஒரு நடுவரையும் வைத்து உண்மையிலேயே ஒரு பட்டிமன்றம் எப்படி நடக்குமோ அதே மாதிரி நடத்த முயற்சி செஞ்சோம் அதுவும் சக்சஸ் 🥳 ஆச்சு. அப்பதான் குறுக்க இந்த கௌஷிக் வந்தா அப்படிங்கிற மாதிரி ! அவன் தான் கொரோனா எங்க சந்தோசத்துக்கெல்லாம் ஆப்பு வைக்க… சரி கொரோனா முடிஞ்சக்கு அப்புறம் ‘இரண்டாவது ஆண்டு விளையாட்டுப் போட்டி 15-01-2023′ நடத்தினோம். மிகச் சிறப்பான செயல்பாடு மற்றும் கடின உழைப்பின் காரணமாக இந்த வருடமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆச்சு எங்க தமிழ் மரபுத் திருவிழா ❤️.
இது விட வேற என்ன மோட்டிவேசன் வேணும்😅 இதே தன்னம்பிக்கையோட அடுத்த வருசம் நடத்தலாம்னு பாத்தா எங்க பசங்களே எல்லாரும் கலந்துக்க முடியாத சூழ்நிலை…

ஒவ்வொருத்தனும் அவனவன் பாதையில் போக நடத்த முடியுமானு தெரில இருந்தாலும் முயற்சிப்போம்னு அவெய்லபிலா இருந்த ஒரு சிலர் எல்லாருக்குமான வேலையை செய்ய போட்டி நாள்ல போட்டி போட்டு எல்லாரும் களம் இறங்கிட்டோம்…🤩 இந்த வேலையதான் செய்வோம்னு இல்லாம எதையும் செய்வோம்ன்னு ஆரம்பிச்சோம்… என்ன நாங்க நினைச்சதெல்லாம் பண்ண எங்களுக்கு ஒரு நாள் மட்டும் பத்தல அதனால என்ன முந்தின நாளையும் கடன் வாங்கினோம்… பட்டிமன்றத்தை இன்னும் சிறப்பா பண்ணுவோம்னு முன்னாடி நாள் சாயங்காலமே வெச்சோம் அதனுடைய முடிவும் மாபெரும் வெற்றியா ✨ அமைஞ்சது அதைத் தொடர்ந்து அடுத்த நாள் காலையில இருந்து சாயங்காலம் வரைக்கும் யாரையுமே ரெஸ்ட் எடுக்க விடாம 30-லிருந்து 40 போட்டி நடத்தி மகிழ்ச்சியிலேயே திளைக்க செய்தோம்!!! இதோட ஹைலைட் என்னன்னா விழாவில் முடிவா நாங்க போட்ட ஆனந்த கூத்துதான் நான் கொஞ்சநஞ்சம் பேர் இல்லை சூப்பர் சீனியர்; சீனியர்; ஜூனியர்; சூப்பர் ஜூனியர்; குட்டீஸ்; கேர்ள்ஸ்; லேடிஸ்னு எல்லாம் சேர்ந்து அப்படி ஒரு ஆட்டம் 😎!!!

அவ்வளவு ஒரு சந்தோஷம்… எப்படியெல்லாம் நாங்க இதை கொண்டு போகணும்னு நினைச்சமோ அதை விட 100 மடங்கு அதிகமா இந்த பொங்கல் எங்களுக்கு அமைஞ்சது 💯 எதிர்பாக்காத பல விஷயங்கள் எங்களவே ஆச்சரியப்படுத்தி மகிழ்ச்சியில திளைக்க செஞ்சது❤️ ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், செல்ஃபின்னு சிறப்பா போச்சு இந்த பொங்கல் அடுத்த பொங்கல் எப்போ வரும்னு காத்திட்டு இருக்கோங்க எல்லாரும்😅. இப்போ எல்லாம் வருஷம் போறதே தெரியல இப்பதான் நியூ இயர் வந்த மாதிரி இருந்துச்சு அதுக்குள்ள ஜூலை வந்திருச்சு இன்னும் 6 மாசம்தான் பொங்கல் வந்துரும்…🤩
மகிழ்ந்திட்டோம்..!! மகிழ்ந்திடுவோம்..!!!
வார்த்தை ஜாலம்…AK
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.