வணக்கம்! வந்தனம் !! நமஸ்தே !!!
இன்னைக்கு செய்தி என்னன்னா “கோபம்-ன்றது கொப்பளம் மாதிரி உடைக்காத வரைக்கும் பிரச்சனை இல்லை ஒரு தடவை உடைஞ்சிருச்சுன்னா அதனால வற பிரச்சனைக்கு அளவே இல்லை“… நான் என்ன சொல்ல வரேன்னா ‘கோபத்தை விரட்டி அன்பால் அரவணைப்போம்‘… என்ன கெட்டு விடப்போகிறது எவன் கேட்பான்… இன்னைக்கு நாம எதை பத்தி பேச போறோம்னா கொரோனா அப்படிங்கற கொடியவன்;
கொரோனா அப்படிங்கிற கோமாளி…!
என்னடா இப்படி சொல்ற நீ என்ன சொல்ல வர அப்படின்னு நீங்க கேட்கிறது எனக்கு புரியுது… கொரோனாவை எப்படி கடந்து வந்தோம் கொரோனா காலத்துல எங்களோட சேட்டைகள் பொழுதுபோக்கு பத்தி தான் இந்த அத்தியாயத்தில் பார்க்க போறோம்… எல்லாரும் காலேஜ்ல ஒவ்வொரு பக்கம் எக்ஸாம்ஸ்; அசைன்மென்ட்னு பிஸியா இருந்த டைம்ல ‘குறுக்க இந்த கவுசிக் வந்தா…’ அப்படிங்கற மாதிரி சடனா கொரோனா அப்படின்னு ஒரு வைரஸ் பரவுது அது உயிரையே கொல்லக் கூடியது என்று சொல்லி நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு போட்ட காரணத்தினால காலேஜ்லையும் லீவ் விட்டதுனால சொந்த ஊர் நோக்கி நாங்க பயணம் பண்ண ஆரம்பிச்சோம் !!!
கிரிக்கெட்–பரமபதம்–சீட்டு கட்டு…
கொரோனா கொஞ்ச நாளிலேயே ரொம்ப சீரியஸ் ஆக ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே எங்க ஊரை விட்டு போய் வேற இடங்களில் செட்டிலான எல்லாருமே கொரோனாவுக்கு பயந்து தொழிலையும் வீட்டையும் விட்டுட்டு எங்க ஊரிலேயே வந்து மீண்டும் தஞ்சம் புகுந்தாங்க… கொரோனா யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது; ஒருத்தரை ஒருத்தர் பார்த்து பேசிக்க கூடாது; வைரஸ் பரவிரும் அப்படின்னு ரொம்ப சீரியஸா விளம்பரம் பண்ணிட்டு இருந்த காலத்துல நாங்க எல்லாரும் ஒன்னா சேர்ந்து “கிரிக்கெட் விளையாடுவதும்; சீட்டு கட்டு விளையாடுவதும்; ஒரே கூட்டமா சுத்துறதுமா இருந்தோம்…“ இது போதாதுன்னு சின்னதுல இருந்து பெருசு வரைக்கும் எல்லாரும் தாயம், பரமபதம், ஆடு புலி ஆட்டம்னு என்னென்ன டைம் பாஸ்காக பண்ண முடியுமா எல்லாத்தையும் பண்ணிட்டு அவ்வளவு சந்தோசமா இருந்தாங்க… இதனால்தான் கொரோனாவை ஆரம்பத்திலேயே கோமாளின்னு சொன்னேன்…

சானிடைசர்-கோழிக்கறி
கொரோனா என்னதான் கொடிய வியாதியா இருந்தாலும் இங்கு மக்கள் எல்லாத்தையும் ஒன்னு சேர்த்ததுனால எங்களுக்கு நல்லவனா தான் தெரிஞ்சான் !! இருந்தாலும் நமக்கும் வந்து விடக்கூடாது அப்படிங்கறதுக்காக கிருமி நாசினிகள தெளிக்கிறது; சானிடைசர் யூஸ் பண்றதுன்னு நாங்களும் கொஞ்சம் கேர்ஃபுல்லா தான் இருந்தோம்…! இங்கதான் எங்களோட மன்றம் வேலை செஞ்சது எங்க கிட்ட இருந்த மருத்துவ சகாக்களை வச்சு சானிடைசர் நாங்களே உருவாக்கி அதை ஊர் முழுக்க எல்லாருக்கும் கொடுத்தோம் கொரோனா பத்தின ஒரு அவேர்னஸ் கிரியேட் பண்ணிணேம்…! இருந்தாலும் அப்பப்ப அடங்காம பசங்க எல்லாரும் சேர்ந்து 5 கிலோ, 10 கிலோ-னு சிக்கன் எடுத்து ஒரு பெரிய குண்டான்ல போட்டு ஜம்முனு சமைச்சு பெரிய இலையா விரிச்சு அதுல கூட்டமா உட்கார்ந்து சாப்பிட்டு திரிஞ்சோம். வைரஸ் பரவும்னு தெரிஞ்சே இந்த வேலையெல்லாம் பாத்துட்டு இருந்தோம்..! அது மட்டும் இல்லாம நைட் 10, 15 பேரு ஒன்னா சேர்ந்து கோயில்; மொட்டை மாடியில கிடைத்த இடத்துக்கு தூங்கி ஒண்ணாவே திரிஞ்சிக்கிட்டு இருந்தோம்…!! என்னங்க பண்றது பாவம் எங்க மக்களுக்கு வேற வழி தெரியல வேலை செஞ்சு பழகிட்டாங்க வீட்டுல சும்மாவும் இருக்க முடியல!!! இதெல்லாம் பாத்துட்டு இருந்த எங்க டாக்டர் அண்ணே இவனுங்க சரிப்பட்டு வர மாட்டானுங்கனு அம்புட்டு பேத்துக்கும் தனித்தனியாக போன் அடிச்சு “இனிமே நீ வீட்டை விட்டு வெளியே போன கெண்டக்கால வெட்டி புடுவேன் ராஸ்கல்…” அப்படின்னு திட்ட எல்லாரும் கொஞ்சம் கொஞ்சமா வீட்டிலேயே அடங்க ஆரம்பிச்சோம்…! இப்பவும் போர் அடிக்குதுனு நெனச்சப்ப நாங்க விளையாடுற கேம் தான் “லூடோ” நாலு பேரு தான் விளையாட முடியும் நல்லாவே டைம் பாஸ் ஆகும்.

மக்கள் பலர் தங்களுடைய தொழில்களை இழந்து நஷ்டப்பட்ட போதும்; எதோ இறைவன் நம்மள உயிரோடு வச்சிருக்காரே அப்படிங்கிற எண்ணம்தான் பெரிசா இருந்தது. வருங்காலத்தில் என்ன பண்ண போறோம் அப்படிங்கற யோசன ஒரு பக்கம் இருந்தாலும் ஊரே ஒன்னா இருக்கும் போது அதெல்லாம் எங்களுக்கு பெருசா தெரியல💯 எல்லோரும் ரொம்ப மகிழ்ச்சியா இருந்த தருணம்னு கூட சொல்லலாம் !!! எல்லார் வீட்லயும் பத்துல இருந்து 15 பேர் கிட்ட இருப்பாங்க நிறைய சமைச்சு சமைச்சு வீட்ல இருக்க லேடிஸ் கூட டயர்ட் ஆகி இருப்பாங்க…! இளச்சி போய் ஏங்கி இருந்த பசங்க எல்லாம் ஆறு மாசத்துல அடிச்சு நொறுக்கி புஜிடிக் பாய்ஸ் ஆயிட்டாங்க…!! “அடடா குண்டாயிட்டோம் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிச்சா அதையும் நாங்க தனித்தனியாக பண்ணல பசங்களோட சேர்ந்து ஒன்னா தான் பண்ணிட்டு இருந்தோம்…”

Back to Work…
ஒரு வழியா கொரோனா கொஞ்சம் கொஞ்சமா சரியாக ஆரம்பிச்சது ஊரடங்கையும் கொஞ்சம் கொஞ்சமா தளர்த்தினாங்க. எல்லாரும் அவரவர் வேலைய பார்க்க அவங்க ஊருக்கு கிளம்பினாங்க. என்னதான் கொரோனா முடிஞ்சி இருந்தாலும் நாங்க எல்லாரும் ஒண்ணா இருந்த நினைவுகள் எங்க மனசு முழுக்க நிறைஞ்சு கிடந்தது !!! அப்படியே வாழ்க்கை சாதாரணமாக மாற நாங்களும் எங்களுடைய இலக்குகளை நோக்கி ஓட ஆரம்பிச்சோம்… இனி நாங்களே நினைச்சாலும் இப்படி எல்லாம் இருக்க முடியுமா என்று எங்களுக்கு தெரியல நண்பர்கள் கூட ஒண்ணா இருக்கறதனாலே சந்தோசம் தானே இத யாரு தான் வேண்டாம்னு சொல்லுவாங்க!!! அடுத்ததா நல்லதொரு அத்தியாயத்தில் சந்திப்போம் நன்றி…
உங்கள் AK….!
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.