காலத்தினால் தொலைக்கப்பட்ட கடிதங்களை தேடும் பயணம் இது. தொழில்நுட்ப வளர்ச்சியால் இளைய தலைமுறை ஆகிய நாம் தொலைத்த வாழ்வியலின் மிக முக்கிய அங்கம் இது, என்னவென்றால் அன்புக்குரியவர்களின் சேமம் குறித்து வினவுவது ?? அவர்கள் மீதான அதீத அன்பை வெளிப்படுத்த எழுத்துக்களால் வடிவமைக்கப்படும் கடிதம்…
இங்கு சில நலம் விரும்பிகளின் மடல்கள் உங்கள் பார்வைக்காக…
கடிதம் என்பது காதலோடு மட்டும் தொடர்பு உள்ளது அன்று. அதையும் தாண்டி பல உறவுகளை இணைத்திடும் ஒரு பாலமாகவே அமைகிறது. அந்த உறவுகள் என்றால் அண்ணன்-தங்கை, அக்காள்-தம்பி, அக்காள்-தங்கை என பல்வேறு கோணங்கள் உண்டு. அதிகபட்சமாக ஒரு கடிதத்தின் அளவு இரண்டில் இருந்து மூன்று பக்கங்களே, அதில் அவர்கள் தங்களை பற்றியும், தங்களை சார்ந்தவர்களை பற்றியும், தங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை பற்றியும் எழுத வேண்டும்.
இதைவிடவும் அழகு எழுதிய அனைத்து கேள்விகளின் பதில்காக அதிகபட்சமாக ஐந்து நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். காத்திருத்தலில் ஒரு சுகம் உள்ளது என்பதை அறியும் படலமாகவே இது அமையும். ஆனால், நமக்கோ இந்த காத்திருத்தலின் அனுபவம் கிடைப்பதில்லை, குறுஞ்செய்தி அனுப்பிய சில நொடிகளில் டைப்பிங் என வந்து, உடனே பதில் கிடைத்துவிடும் (Watsapp, Facebook, Instagram).

வாட்ஸ்அப்- யில் குறுஞ்செய்தி அனுப்பிய பின் Blue Tick வருமா என காத்திருக்கும் நமக்கோ இந்த தூய அன்பினை புரிந்துகொள்வது என்பது எளிதான காரியம் அல்லவே ??
கடிதம் வரைவது என்பது அவ்வளவு எளிதல்ல. அதற்காக அவர்கள் செலவிடுவது தங்களின் விலைமதிப்பில்லாத பொன்னான நேரமே. தீபாவளி, பொங்கல், வருட பிறப்பு, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களில் Forward Messages & Stickers பகிரும் நமக்கோ இது புது அனுபவமே…!

இந்த கடிதங்களை நான் வாசிக்கும் போது, அவை இன்று அளவிலும் உயிரோட்டம் உள்ளதாகவே உணர்கிறேன்.
மீண்டும் இன்னும் சில கடிதங்களோடு சந்திப்போம்.
என்றும் அன்புடன்….
உங்கள் செல்வ மீனா. ரா..
எங்கள் தனித்துவமான வாட்ஸ்அப் சேனலில் இணைந்து எங்களுடன் தொடர்பில் இருங்கள். புதிய செய்திகள் உங்களுக்காக காத்திருக்கின்றன. எங்கள் வளரும் சமூகத்தின் ஒரு பகுதியாக இப்பொழுதே சேருங்கள்!

https://whatsapp.com/channel/0029Vab3zjcGufInexCDBx2O
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.