“தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலர் தோன்றலின் தோன்றாமை நன்று”
என்னும் குறள் எடுத்தியம்புவது போல் பழைய ஜெயங்கொண்டம் மண்ணில் பிறந்த ஓர் சாதாரண குழந்தை எவ்வாறு பெயர் புகழ் அடைந்து தன் வாழ்வை ஓர் சரித்திரமாக மாற்றியது என்பது குறித்து கூறும் ஓர் சரித்திர காவியம் இது.1936 ஆம் ஆண்டு பிறந்து 2024 ஆண்டு வரை வாழ்ந்த ஒரு சாதனை பெண்ணின் கதை…
தந்தை பருப்பு வியாபாரி, தாய் பிள்ளைகளையும் குடும்பத்தையும் கவனித்து வந்தார்.ஆண் பிள்ளைகளின் ராஜாங்கமாய் இருந்த அக்காலத்தில் மகளிர் மட்டுமாய் எட்டு பெண் குழந்தைகளை பெற்றனர் இத்தம்பதியினர்.அவர்களுள் இரண்டாவது பெண் பிள்ளை அழகம்மாள் என்கிற நடுப்பிள்ளை.
பெயருக்கு ஏற்ப அழகிய முகம்.பள்ளி படிப்பை பொறுத்த மட்டில் மூன்றாம் வகுப்பு வரை படிக்க குடும்ப சூழ்நிலை மிகவும் சிரமமாக பள்ளி போக வேண்டிய வயதில் குடும்ப பாரத்தில் பங்களிக்க வேண்டிய கட்டாயம்…மாடு மேய்த்தல், விறகு சேகரித்தல், புல்கட்டு சுமத்தல் என நடுப்பிள்ளைக்கான வேலைகள் ஏராளம்.அழகம்மாள் என்பது பெயராக இருப்பினும் நடுப்பிள்ளை என்பதே அடையாளம் ஆனது.1963 ஆம் ஆண்டு ஆசிரியர் ராஜலிங்கம்
அவர்களுக்கும்,அழகம்மாள் அவர்களுக்கும்
திருமணம் நடக்க அத்தானுடன் சேர்ந்து வாழ்க்கையை துவங்கினார்.இத்தனை நாளாக அரும்பாடுபட்ட அழகம்மாளுக்கு ஒரு அழகிய வாழ்க்கை அமைந்தது.’நாம் இருவர் நமக்கு ஐவர் ‘ என்னும் பாணியில் மூன்று பெண் குழந்தைகளையும் இரண்டு ஆண் பிள்ளைகளையும் பெற்றெடுத்தனர். சிறப்பான குடும்பம் போதுமான வருமானம் வாழ்க்கை சீரும் சிறப்பும் பெற, அந்த மகிழ்ச்சி நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லை.யார் கண் பட்டதோ 1990 ஆம் ஆண்டு நடந்த விபத்தில்,தன் வாழ்வின் பாதியை(கணவன்) இழந்து மனமுடைந்த இவர் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி அவர்களின் வாழ்க்கை செழிப்படைய செய்ய தான் வாழ வேண்டும் என்பதை உணர்ந்து காடு தோட்டம் என தன் கடின உழைப்பை வழங்க தன் மனதை மாற்றிக் கொண்டார். காலை எழுந்ததும் தோட்டதிற்கு செல்வது,மதியம்
முழுவதும் பருப்பு புடைப்பது என்று நாள்
முழுவதும் அயராத உழைப்பு..பிறகு பெண் பிள்ளைகளை ஒருவர் பின் ஒருவராக மணமுடித்து வைத்தார்.தனது
ஆண் பிள்ளைகளையும் கரை
சேர்த்து விட்டு ,தன்னுடைய வாழ்க்கையை தொடர்ந்தார். பேரப்பிள்ளைகளின் எண்ணிக்கை தன் பிள்ளைகளைப் போல இரு மடங்காக அழகம்மாளின் மகிழ்ச்சியும் இரட்டிப்பானது. கடைசி பேரனின் வருகையில் பூரித்து தன் பிறவி பயனை அடைந்ததாய் உணர்ந்தவர். தானமும் தர்மமுமே இவரது அடையாளம் ஆயிற்று.2004 ஆண்டு லேசாக நெஞ்சுவலி மருத்துவரை அணுக மாரடைப்பு இருப்பதாக தெரியவந்தது. இனி உடலுழைப்பு கூடாது ஓய்வெடுக்கும் படி மருத்துவர்கள் சொல்ல அதையெல்லாம் காதில் வாங்காமல் தன் தினசரி வாழ்க்கை தொடர்ந்தார்.அதன் பிறகு இத்தனை ஆண்டு எமனை ஏமாற்றி வாழ்ந்தது ,அவரின் மனதைரியமும்,உழைப்புமே காரணம்.அவருடைய அடையாளம்
என்றாலே அவருடைய பேச்சு மற்றும்
உபசரிப்பும் தான்.அவரிடம் ஒரு குவளையேனும் குழம்பி அருந்தாதோரே ஊரில் இருக்க முடியாது. அழகம்மாளின் கை பக்குவம் யாருக்கும் வராது என்று கூறும் அளவிற்கு அற்புதமாய் சமைக்க கூடியவர்.கோவிலுக்கு வருபவர்களுக்கு
ஆறுதல் சொல்லி அனுப்புவதும் அவரிடம் பிரச்சனைகளுக்கு எளிய தீர்வு வழங்குவதும் இவரின் வழக்கம்.பால் இல்லாதவர்களுக்கு
டம்லர் டம்லராக பால் கொடுப்பது
இது மட்டுமா,சாப்பாடு இல்லாதவர்களுக்கு
வயிரு நிறைய சாப்பாடு கொடுப்பது ,இப்படி
அனைவருக்கும் செய்ய வேண்டும் என்னும் பரந்த மனப்பான்மை கொண்டவர்.
தன்னுடைய பேரக்குழந்தைகளுக்கு,கேட்கும்
நேரத்தில் வேண்டியதை கொடுப்பது,அளவு கடந்த பாசத்தை கொடுத்து தன்னுடைய
பேரக்குழந்தைகளை வளர்த்தவர்.மூன்று பேரோட வேலையை ஒருவராய் முடிக்கும்
கடின உழைப்பாளி. தன் ராஜ்யத்தில் தான் ஈன்ற வாரிசுகள் குறைவில்லாத வாழ்க்கை வாழ துவங்க… தான் முதுமை அடைந்ததை உணர்கிறார்.”என்னதா வயசானாலு
அவங்களோட அழகு ஸ்டைலு அவங்கள
விட்டு போகவில்லை”. வாலிபம் முதலே ஊர் சுற்றுவது அழகம்மாளுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. அதுவும் ஆன்மீகச் சுற்றுலா என்றால் அனேக பிரியம்.காசி முதல் இருந்து இராமேஸ்வரம் அத்துணை கோவில்களையும் பார்த்தவர். இருப்பினும் திருச்சி மாநகரம் ஏனோ அவரின் மனதை கவர்ந்தது அவர் மேற்கொண்ட அதிகபட்ச கோயில் பிரயாணங்கள் திருச்சியை மையமாகக் கொண்டே அமைந்தது திருவானைக்காவல் சமயபுரம் ஸ்ரீரங்கம் என திருச்சியை அடிக்கடி வலம் வருவது அவரின் ஆசை. கொரோனாவை வென்று காலம் உருண்டோட கடந்த 2 ஆண்டுகளாய்
தன்னுடைய கண் பார்வை குறையவே அவரின் தன்னம்பிக்கையும் சற்றே அவரை விட்டு விலகத் தொடங்கியது. கண்ணில் ஏற்பட்ட குறைபாட்டின் காரணமாக பார்வை சற்றே குறையவே… எங்கே தன்னால் சுயமாய் தன்னை பார்த்துக் கொள்ள முடியாதோ என்னும் பயம் ஆட்கொள்ள… மூளையில் திடீரென ஏற்பட்ட இரத்த உறைதல் அவரை நினைவாற்றலையும் பாதிக்க துவங்கியது. எங்கே தன் சுயமரியாதையும் இழக்க நேரிடமோ எனும் பயமும் தான் பிறருக்கு பாரமாகி விடுவோமோ எனும் கிலியும் பற்றிக்கொள்ள தைரியத்துடன் மரணத்தை எதிர் கொண்டு எங்களை எல்லாம் கண்ணீர் கடலில் ஆழ்த்தி சொர்க்க வாசல் நோக்கி பயணத்தை தொடங்கி விட்டார்.
எங்களின் ஆசை:-
கனவு போல் இருக்கிறது ;
கனவாகவே இருந்து விட
தோன்றுகிறது;
அவளின் பிரிவு- அம்மாச்சி!!!Article: Supriya
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.