வெயில் அடிச்சப்போ என்ன வெயில்னு இருந்துச்சு
அதுவே மழை பெய்யும்போதும் என்னப்பா நசநசனு பேஞ்சுட்டே இருக்குனு இருந்துச்சு
இதாங்க மனிதனோட மனசு இல்லாதத மட்டும் தா தேடும்… என்ன இவன் தத்துவம்லாம் சொல்றான்னு நினைக்காதிங்க… நா சொல்லனாளும் அதான் நெசம்… சரி கதைக்கு வருவோம் இன்னைக்கு என்ன பேசலாம்னு பாத்தா எங்களுடைய இரவு பொழுகளுக்கு எப்போதும் தனியிடம் உண்டு. ஆமாங்க நாங்க இரவு இருட்டிலயும் விளையாடுவோம்… கரண்ட் போய்ட்டா போதும் ஒரே அலம்பல்தா…💥 இன்ட்ரோவெர்ட் கூட ஆ…ஊ… னு கத்துவான் விசில் பறக்கும்… கரண்ட் வந்தாலும் இதேதான்… இதெல்லாம் ஏன்டா பண்ணிங்கன்னு கேட்டா என்கிட்ட பதில் இல்லை. ஆனால், எங்களோட சந்தோஷம் எல்லாமே இந்த மாதிரி சின்ன சின்ன விசயமாதான் இருக்கும்… இப்படி கொஞ்ச கொஞ்சமாக வளர்ந்த நாங்க எங்களோட அரட்டைக்கு அரசாங்கமே காந்தி சிலைய கட்டி கொடுத்துருந்துச்சு… 9 மணிக்கெல்லாம் தூங்கிட்டு இருந்த நாங்கதான் இப்போ எங்க ஊரோட Batman…✨
காந்தி சிலையில ஒக்காந்து பேசாத பேச்சா… நாங்க போடுற திட்டம் எல்லாமே தெரிஞ்ச ஒரே ஆள் நம்ம காந்தி தாத்த மட்டும்தாங்க!! நடுசாமம் ஆனாலும் எங்க டீ மோகம் குறையரதில்ல… பக்கத்து ஊருக்காச்சும் போய் டீ கோப்பைக்கு முத்தம் கொடுக்காம தூங்கரதில்ல… டீயை பத்தி பேசினா அதுக்கு தனியா ஒரு எபிசோடு போகும் அது அப்புறம் பார்ப்போம் ரொம்ப பேசி போர் அடிக்க விரும்பல இடத்தை எபிசோட்ல பாக்கலாம் மக்களே…


வார்த்தை ஜாலம்: AK
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.