பழங்காலந்தொட்டு வஞ்சி மாநகர் எனும் புகழோடு காவிரித் தாயின் அரவணைப்பில் பஸ் பாடியும், டெக்ஸ்டைல்ஸும் அடையாளமாக்கி கருவூர்னு இருந்த பெயர கரூர் ஆக்கி அங்கே சோழர்கள் வாழ்ந்த சோழபுரத்தை நோக்கி பயணித்து அச்சச்சோ வரலாறு புவியியல்னு போர் அடிக்க மாட்டேங்க… சும்மா எங்க ஊருக்குதா இவ்ளோ பில்டப்… ஆமா பொறந்த ஊருனா சும்மாவா… பழைய ஜெயங்கொண்டம் (பழசங்கொடம்) வயசான பாதி பெரியவங்களுக்கு இப்படி சொன்னா தான் தெரியும்!!! ஊருன்னு இருந்தாலே அதுல பத்து பதினைந்து பசங்க சுத்துறதும் மன்றம்னு திரியுரதும் சகஜம் தானப்பா! அப்படித்தாங்க நாங்களும் குட்டி நண்பன்கிற பேர்ல சுத்திகிட்டு இருக்கோங்க…இங்க எங்கள பத்தின கதையும் எங்க கூடவே எங்க ஊரை பத்தின கதையும் நாங்க வளர வளர என்னெல்லாம் மாறுச்சு என்னலாம் நாங்க இப்போ மிஸ் பண்றோம் அப்படிங்கறத பத்தி எல்லாம் நிறைய பேச போறோம்ங்க.. வழ வழன்னு பேசுறானே தவிர மேட்டருக்கு வர மாட்டானே நினைக்கிறீர்களா? என்னங்க பண்றது முதல் அத்தியாயம் எப்படி கொண்டு போறதுன்னு தெரியலை அதனால எதாச்சும் எழுதுவோம்னு எழுதி இருக்கிறேன் உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு மன்னிச்சுக்கோங்க… இதுதாங்க ஆரம்பம் இந்த பயலுக எப்படி எல்லாம் இருந்தாங்க அப்படிங்கிறது இனி வர அத்தியாயம்ல கொஞ்சம் கொஞ்சமா பாப்போம்.

உடனே எல்லாத்தையும் சொல்லிட்டா எப்படி? காத்திருப்போம்…!!!
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.