தொடக்கப்பள்ளியும் தொட்டு பிடிச்சும்:
என்னதான் இப்ப ஸ்கூல் எல்லாம் முடிச்சு கழுத வயசு ஆயிருந்தாலும்; அப்ப ஸ்கூல் போறதுக்கு அழுது அடம் பிடிச்சவங்க தாங்க நாங்க… அதுவும் குறிப்பா இந்த மே மாசம் முடிஞ்சு ஸ்கூல் போகும்போது எல்லாம் அப்பப்பா எதோ நம்மள கொண்டு போய் ஜெயில்ல தள்ளுற மாதிரியே ஒரு ஃபீலிங்கா இருக்கும்💯. என்னங்க பண்றது விளையாடி பழகிட்டோம் விடமுடில😅 என்னடா தொட்டு புடிச்சு சொன்னானே இப்ப சம்பந்தம் இல்லாம பேசுறானே நினைப்பீங்க இதோ வந்துட்டேன் ஸ்கூல் அந்த சின்ன வயசுல நம்மளால என்ன கேம்லாம் விளையாட முடியும் அப்படின்னு பார்க்கும்போது இந்த தொட்டு புடிச்சு, ரிங்க ரிங்கா ரோசஸ் , ஸ்டாப் கேம், டிக் டிக் யாரது இந்த மாதிரி கேம்ஸ் வந்து நம்ம நம்மள அறியாமலேயே அவ்ளோ தடவை விளையாடி இருப்போங்க நம்ம கூடவே இதெல்லாம் டிராவல் பண்ணி வந்திருக்கும்… இது ஒவ்வொன்னையும் ஆடும்போது அவ்வளவு சந்தோஷமா இருக்கும்… “இந்த தொட்டு புடிச்சு விளையாடி பல்லை உடைச்சவங்க” கதையெல்லாம் இங்க இருக்குது அத எங்க பள்ளி படிகட்ட கேட்டா சொல்லும்…இப்படி விளையாட்டு பசங்களா இருக்கீங்களே டா அப்படின்னு மட்டும் நினைச்சுறாதீங்க நாங்க படிக்கவும் செஞ்சிருக்கோம்!!! தொடக்கப் பள்ளியில் இருந்து எங்களுடைய படிப்புக்கான போட்டி ஆரம்பிச்சுருச்சு இது கடைசி வர முடியவேயில்லை. இப்போ ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு துறையில கால் பதிச்சு இன்னும் கொஞ்ச நாள்ல வெற்றி கொடியையும் நாட்டிடுவோம் கொஞ்சம் போர் அடிக்குதுல பரவால்ல எல்லாத்தையும் விளையாட்டாவே சொல்லிட்டா அப்புறம் நாங்க பட்ட கஷ்டம் எல்லாம் தெரியாமயே போயிடும் அடுத்த எபிசோட்ல பாக்கலாம் மக்களே…
வார்த்தை ஜாலம் : AK
Like this:
Like Loading...
Related
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.