நண்பர்களே! தமிழ்நாட்டின் மரங்கள் பற்றி பேசிக்கிட்டிருக்கோம். இந்த வாரம் ஆலமரத்தை பற்றி பாக்கலாம் வாங்க.
ஆலமரம் – நம்ம சமூகத்தின் அடையாளம்
இந்த வாரம் “தமிழகத்தின் மரங்கள் – மரங்களின் மகத்துவம்” தொடர்ல, ஆலமரம் பற்றி விரிவா பாக்கபோறோம். ஆலமரம், நம்ம தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான மரம். இதுக்கு “Banyan Tree” ன்னு ஆங்கிலத்துல சொல்வாங்க. மிக பெருசா வளரக்கூடிய மரங்கள்ல இது ஒன்னு. ரொம்ப வருஷம் வாழும், அதிக ஆக்சிஜென் (Oxygen) வாயுவை வெளியேற்றக்கூடியது.

ஆலமரத்தின் மகத்துவம்:
ஆலமரம், நம்ம சமூகத்தின் அடையாளம். பழங்காலத்தில், கிராம சபைகள் ஆலமரத்தின் கீழ் கூடின. இது ஒரு புனித மரமாகக் கருதப்பட்டது. நம்ம பல தமிழ் படங்கள்ல பஞ்சாயத்து காட்சி ஆலமரத்துக்கு கீழதான் எடுத்திருப்பாங்க நாட்டாமை படத்துல வர “நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு” சீன மறந்திருக்க மாட்டிங்கனு நினைக்கிறன்.
ஆலமரத்தின் குணங்கள்:
ஆலமரம், நம்ம உடல்நலத்துக்கு ரொம்ப பயனுள்ள மரம். இதோட இலைகள், பட்டை, விதைகள் எல்லாமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. ஆலமரத்தின் குச்சிகள், வேப்பின் போலவே, பல் துலக்க பயன்படுத்தப்படுகின்றன.
ஆலமரத்தின் மருத்துவ பயன்கள்:
நம்ம ஆலமரம், எத்தனை மருத்துவ குணங்களை கொண்டது தெரியுமா? இதோ அதன் சில முக்கியமான மருத்துவ பயன்கள்:
- பல் ஆரோக்கியம்: ஆலமரத்தின் குச்சிகள் பல் துலக்க பயன்படுத்தப்படுகின்றன.
- சரும பிரச்சினைகள்: ஆலமரத்தின் பால் சரும பிரச்சினைகளை குணமாக்க உதவும்.
- நரம்பு பிரச்சினைகள்: ஆலமரத்தின் இலைகள் நரம்பு பிரச்சினைகளை குணமாக்க உதவும்.
ஆலமரத்தின் சமூகத்தில் இடம்:
ஆலமரம், நம்ம தமிழ்நாட்டில், பொது இடங்களிலும், கோவில்களிலும் அதிகமாக காணப்படும். அக்காலத்தில் ஊர் சபைகள், பஞ்சாயத்து கூட்டங்கள் ஆலமரத்தடியில் தான் நடைபெறும். ஆலமரம், நம்ம கலாச்சாரத்திலும், ஆன்மீகத்திலும் முக்கிய பங்கு வகிக்குது. இது இந்தியாவின் தேசிய மரம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், விநாயகர், கருப்பர், முனீஸ்வரன் போன்ற தெய்வங்களின் சன்னதிகள் பெரும்பாலும் ஆலமரத்தின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும்.
ஆலமரம் பற்றிய சில பிரபலமான சொலவடைகள்:
ஆலமரம் பற்றிய பல கதைகள் நம்ம தமிழ் இலக்கியத்தில் காணலாம். “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாளும் இரண்டு சொல்லுக்குறுதி” என்ற பழமொழி, திருக்குறள் மற்றும் நாலடியார் போன்ற நூல்களை குறிப்பிடுகிறது.
மீண்டும் சந்திப்போம்:
இது தான் நம்ம ஆலமரம் பற்றிய சிறு அறிமுகம். அடுத்த பகுதியில் இன்னொரு மரம் பற்றி பேசலாம். காத்திருங்க. உங்க கருத்துகள், பின்னூட்டங்களை சொல்லுங்க.
அன்புடன்,
மதன்
மீண்டும் சந்திப்போம். நன்றி!
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.