லாலாப்பேட்டை, செப். 4-
கிருஷ்ணராயபுரத்தில் தேர் செல்ல வசதியாக வயல்களில் சாகுபடி செய்யப்பட்ட வாழை, வெற்றிலை கொடிக்காலை அழித்து விவசாயிகள் வழிஏற்படுத்தி கொடுத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
கிருஷ்ணராயபுரத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிடாரி அழகுநாச்சியம்மன் குருநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் திருவிழா 21 ஆண்டுகள் கழித்து நடப்பதால் பக்தர்களுக்கிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எட்டுப்பட்டிக்கு சொந்தமான கோயில் என்பதால் அனைத்து ஊர்களுக்கும் தேர் செல்லும்.
இக்கோயில் திருவிழா கடந்த மாதம் 28ம்தேதி காப்பு கட்டப்பட்டு தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான நேற்று 3ம்தேதி தொடங்கிய தேர்பவனியில் சிறப்பு அலங்காரத்தில் எளுந்தருறினார். பின்னர் தேரை பக்தர்கள் தூக்கி கொண்டு இரவு விடிய, விடிய முக்கிய வீதியின் வழியாக வலம் வந்தனர்.
இன்று சிறிய தேர் பிச்சம்பட்டி, கோவக்குளம், தாராபுரத்தனூர், குச்சிப்பட்டி,சேவகனூர் என இந்த ஊர்களுக்கு தேர் செல்லும். இந்த ஊருக்கு செல்ல சாலை வசதி இருந்தாலும் தேர் வயல் வெளிகளில் வழியாக தான் செல்வது பாரம்பரியமாக நடந்து வருகிறது.
இன்று 4ம்தேதி சிறிய தேர் கிராமத்தை நோக்கி செல்லும். தேர் செல்ல வசதியாக வயல்களில் சாகுபடி செய்யப்பட்ட பல ஏக்கர் அளவில் வாழை, வெற்றிலை கொடிக்கால், மரங்கள் ஆகியவையை அழித்து நிலத்தை சமன்படுத்தி தேர் செல்ல விவசாயிகள் வழி ஏற்படுத்தி தயாராக வைத்துள்ளனர்.
குருநாதர் சாமி சாலையில் சென்ற தயிர் வியாபாரிடம் தயிர் வாங்கி குடித்து விட்டு காசு கொடுக்காமல் வயல்வெளி வழியாக ஒளிந்து சென்றதால் வயல்வெளி தான் சாமிக்கு பிடித்த பாதை என்பதால் எப்போது திருவிழா நடந்தாலும் வழக்கத்தை மாற்றாமல் வயல்களில் தேர் செல்ல விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை அழித்து பாதை ஏற்படுத்தி வருவதாக பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
திருவிழா வரும் 8ம்தேதி வரை நடக்கிறது.
ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், எட்டுப்பட்டி ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
படவிளக்கம்
கிருஷ்ணராயபுரத்தில் அழகுநாச்சியம்மன் குருநாதர் கோயில் திருவிழாவை முன்னிட்டு தேர்தலில் செல்ல வயல்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை அழித்து விவசாயிகள் பாதை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
மேலும் ஏற்பாடுகள் கோயில் நிர்வாகம் மற்றும் எட்டுப்பட்டி ஊர் பொதுமக்கள் மூலம் நடைபெற்று வருகிறது.



Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.