மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி, ஒலிம்பிக் போட்டி நடந்த அதே பாரிஸ் நகரில் இப்போது நடந்து வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியா எட்டுப் பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை நிகழ்த்தியிருக்கிறது. இது இந்தியா 2024ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வென்ற மொத்தப் பதக்கங்களை விட அதிகம். அது மட்டுமல்ல, இப்போது பதக்கப் பட்டியலில் பதினைந்தாவது இடத்தையும் பிடித்திருக்கிறது. இது இன்னும் முன்னேறலாம். இந்தியா தனது 2024 ஒலிம்பிக்கை 71வது இடத்தில் நிறைவு செய்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

நமது பிள்ளைகளை ஒலிம்பிக் போட்டிகளைப் பார்க்கிறார்களோ இல்லையோ இந்தப் பாராலிம்பிக் போட்டிகளைப் பார்க்க நாம் ஊக்குவிக்க வேண்டும். அங்கே வலிக்கிறது, இங்கே வலிக்கிறது என்று சொல்லிவிட்டு சாதாரண உடற்பயிற்சிகளைக் கூட செய்யாமல் இருப்பவர்களுக்கு பாராலிம்பிக் வீரர்கள் மண்டையில் ஓங்கி ஒரு குட்டு வைத்து சொல்லித் தருகிறார்கள். ஏதேதோ பிரச்னைகள், அழுத்தங்கள் என்ற மனநிலையோடுதான் கால்களை மட்டுமே பயன்படுத்தி அம்பு எய்யும் ஷீத்தல் தேவியின் வீடியோ ஒன்றைப் பார்த்தேன். சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு இரண்டு கைகளையும் பயன்படுத்தி அம்பு எய்பவர்களோடு சரி சமமாகப் போட்டி போடும் ஷீத்தலின் வயது வெறும் பதினேழுதான்.
ஆனால் 10, 9 என்ற புள்ளிகளை விட குறைவாக ஒரு அம்பு கூட செல்லவில்லை. பாராலிம்பிக் இருபாலருக்குமான அம்பு எய்தும் போட்டியில் ஷீத்தல் வெண்கலம் வென்றாள். அந்த அறிவிப்பு வந்தபோது அனைவரும் மகிழ்ந்து கொண்டாட அவள் கண்கள் கலங்குகின்றன. துடைத்துக் கொள்ள நீளும் கைகள் இல்லை அவளுக்கு. கலங்கத் தொடங்கிவிட்ட என் கண்களை துடைத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். நானெல்லாம் பிரச்னை என்று சொல்லிக் கொள்ளவே தகுதியற்றவன் என்பதை ஷீத்தல் மட்டுமல்ல பாராலிம்பிக்கில் போட்டியிடும் ஒவ்வொரு வீரனும் வீராங்கனையும் எனக்கு உணர்த்தி விட்டார்கள். வீரம் என்பது முதலில் நம்மை வெல்வது. நம் மனம், உடல் தரும் தடங்கலைத் தாண்டி போட்டிக்கு வந்து நிற்பது. அதற்குப் பிறகுதான் வெற்றி தோல்வி எல்லாம். பாராலிம்பிக் ஜியோ சினிமாவில் ஒளிபரப்பாகிறது. தவறாமல் பாருங்கள்.
இந்த செய்தி மிகுந்த ஊக்கத்தைக் கொடுக்கும்! பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சாதனை மற்றும் வீரர்கள் நிகழ்த்திய வீரத்தன்மை அனைவருக்கும் ஒரு பெரும் உருப்புணர்வாக இருக்கிறது. உடலமைப்பின் வரம்புகளை தாண்டி, மன உறுதியை வெளிப்படுத்தும் இப்போட்டிகளில், ஷீத்தல் தேவியின் சாதனை மட்டுமல்ல, பல மாற்றுத் திறனாளி வீரர்கள் நம் மனதில் நீங்காத தடம் பதிக்கின்றனர்.
அவர்களிடம் இருந்து நாம் பெற வேண்டிய மிக முக்கியமான பாடம், எத்தனை சவால்கள் இருந்தாலும் மன உறுதி மற்றும் கடின உழைப்பால் அனைத்தையும் கடக்க முடியும் என்பது. ஒவ்வொரு மாற்றுத் திறனாளி வீரரும், காயம், சவால்கள் போன்றவற்றால் நம்மைத் தள்ளிப் போடாமல் முயற்சியை தொடர்வதற்கான முக்கியம்குறிப்பாக இருக்கிறார்கள். நமது பிள்ளைகளைப் பாராலிம்பிக் போன்ற போட்டிகளைப் பார்க்க ஊக்குவிப்பது அவர்களுக்கு வாழ்க்கையின் மற்றொரு பக்கத்தை அறிமுகப்படுத்தும் முயற்சி ஆகும்

Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.