
ஒரு முறை ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் கத்தாரின் பார்ஷிம் என்பவரும் இத்தாலியின் டம்பேரி என்பவரும் தங்கத்துக்காக கடுமையாக போராடினார்கள். இருவரும் 2.37 மீ உயரம் தாண்ட எஞ்சியவர்களால் முடியாமல் போனது. அதற்கு முன்பு வைக்கப்பட்ட உயரம் வரை இருவரும் தண்டிவிட்டார்கள்.
அதன் பின் இருவருக்கும் 2.37 மீ விட உயரமாக வைத்து இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்க முயற்சிக்க மூன்று முறையும் இருவராலும் தாண்ட முடியவில்லை. இறுதியாக ஒரே ஒரு சான்ஸ் கொடுக்கபட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக இத்தாலி வீரர் டம்பேரிக்கு காலில் அடி பட்டு அதனால் வலி காரணமாக பின் வாங்குவதாக அறிவித்தார்.
ஆனால் கத்தார் வீரர் அதன்பின் செய்த செயல்தான் சிறப்பான தரமான சம்பவம். அவருக்கு தங்கம்🥇 உறுதியாக கிடைக்கும் என்று தெரிந்த பின்னரும் போட்டியாளர்களிடம் ” நானும் போட்டியில் இருந்து விலகினால் என்ன செய்வீர்கள்? ” என்று கேட்க அதற்கு போட்டியாளர்களோ ” இருவருக்கும் பகிந்தளிப்போம் 🥇🥇 ” என்று கூற உடனே அவரும் பின் வாங்குவதாக அறிவித்தார்.
எதிர் வீரரின் திறமையையும் விடாமுயற்சியையும் மதித்து அவரும் பரிசு பெற தகுதியானவரே என்று இப்படி செய்து தன் Sportsmanship யை நிருபித்தார் கத்தார் வீரர் பாஷிம்.
இருவருக்கும் தங்க பதக்கம் பகிர்ந்தளிக்கப்பட்டது🥇🥇 ஒலிம்பிக் வரலாற்றில் மிக அற்புதமான தருணங்களில் ஒன்று ♥️
Discover more from நண்பன்
Subscribe to get the latest posts sent to your email.